Advertisment

ஒன்றிய அரசு தமிழகத்தை எப்பொழுதும் புறக்கணித்தே வருகிறார்கள்; அதுதான் வரும் பட்ஜெட்டிலும் நடக்கப்போகிறது-திருமாவளவன்

தமிழகத்தை எப்பொழுதும் ஒன்றிய அரசு புறக்கணித்தே வருகிறது அதுதான் வரும் பட்ஜெட்டிலும் நடக்கப்போகிறது என திருமாவளவன் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
thirumavalavan

திருமாவளவன் பேட்டி

வி.சி.க தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான் திருமாவளவன் மணப்பாறையில் நடைபெற்ற விசிக கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.

Advertisment

திருச்சி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது தெரிவித்ததாவது; தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் தலித்துக்கள் பாதிக்கப்படும் போது அவர்கள் அளிக்கும் புகார்களை உடனடியாக காவல் துறை ஏற்று கொள்வதில்லை. அப்படி ஏற்று கொண்டாலும் இரு தரப்பு மீதும் வழக்கு போடுவது தொடர்ந்து நடக்கிறது.

புகார் அளிப்பவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்வார்கள். அது புதிய அணுகுமுறை அல்ல. வேங்கைவயல் விவகாரத்தில் புலன் விசாரணையில் கிடைத்த ஆதாரம் என்கிற அடிப்படையில் ஏற்கனவே வெளியிட்ட ஆடியோவை தான் வெளியிட்டார்கள்.

டி.என்.ஏ முடிவு அடிப்படையில் தான் இந்த முடிவுக்கு வந்தோம் என கூறும் அவர்கள் அது குறித்து எந்த ஆதரத்தையும் தரவில்லை. தாயும், மகனும் பேசிய பேச்சை ஆதாரமாக தருவது பெரும் அதிர்ச்சியை தருகிறது. அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் அடிப்படையில் தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

Advertisment
Advertisement

ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அணுகுமுறையில் இருக்கும் கோளாறு தான் இதற்கு காரணம். அடுத்து இருக்கும் ஒரு வாய்ப்பு என்கிற அடிப்படையில் நம்பிக்கை இல்லையென்றாலும் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.

பரபரப்புக்காக சீமான் காலப் பொருத்தம் இல்லாத கருத்தியல் பொருத்தம் இல்லாததை பேசி வருகிறார். பரபரப்புக்காக தான் அவர் அவ்வாறு பேசி வருகிறார். தன்னை நம்பி வரும் இளைஞர்களின் உணர்ச்சிகளை அரசியலுக்காக பயன்படுத்தவே அவர் அவ்வாறு பேசுகிறார். பெரியாரின் வெங்காயம் தான் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தியது.

பெரியாரின் வெங்காயம் தான் சனாதான சக்திகளை வேறுண்ற விடாமல் விரட்டி அடித்து கொண்டிருக்கிறது. பெரியார் இந்தியா முழுமைக்கும் உள்ள சமூக நீதியின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் அனைவருக்குமான தலைவர் சர்வதேச அளவில் அறிவியல் பூர்வமாக அணுகும் ஜனநாயக சக்திகளின் நம்பிக்கைக்குரிய தலைவர்.

அவரை தனிப்பட்ட முறையில் கொச்சைப்படுத்துவது ஏற்புடையது அல்ல அந்த போக்கை சீமான் கைவிட வேண்டும். சீமான் பேசிய பேச்சுக்கள் பொய் என அம்பலமாவது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை.
அது விவாதிக்க வேண்டிய முக்கிய பிரச்சனையும் அல்ல. தமிழகத்தை விவாதிக்க வேண்டிய பிரச்சனைகள் நிறைய இருக்கிறது.

பா.ஜ.க வக்ஃபு மசோதாவை கொண்டு வர முயற்சிப்பது குறித்து சீமான் இது வரை பேசவில்லை, சிறுபான்மை மக்களை தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பாஜக அரசை குறித்து அவர் பேசவில்லை. பேசப்பட வேண்டிய பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கின்றன. தமிழ் ஈழ அரசியல் என்பது வேறு தமிழ்நாட்டின் அரசியல் என்பது வேறு. இந்த இரண்டு அரசியலையும் இணைத்து பேசுவது என்பதே பொருத்தமில்லாதது.

சென்னையில் காரில் சென்ற பெண்களை சிலர் துரத்தி சென்றது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உறுதியளித்திருக்கிறார்கள் இது போன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை உள்ளிட்டோர் 24 மணி நேரமும் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பது குறித்தும் திமுக அரசை குறை கூறுவது மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதை தாண்டி மக்கள் பிரச்சினையை குறித்து அவர்கள் பேசுவதே இல்லை. திமுக அரசுக்கு எதிராக பேசுவது மட்டும் தான் அரசியல் எனக் கருதுகிறார்கள்.

தமிழகத்தில் மக்கள் அனைவரும் நன்றாக இருக்கிறோம் சமூக நல்லிணக்கம் நிலவுகிறது, உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடப்பது போல் கும்பல் கொடையவர்கள் நடப்பதில்லை பதட்டமில்லாத நிலை தமிழகத்தில் உள்ளது. தலித்களுக்கு எதிரான பிரச்சினைகள் அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கிறது ஆனால் ஒப்பிட்டு பார்கையில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் சமூகமான நிலை தான் உள்ளது.

வேங்கைவயல் பிரச்சனையை பிரதான எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி ஏன் கையில் எடுத்து போராடவில்லை. வக்பு திருத்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டு குழுவிற்கு அனுப்பும் போது அந்த குழுவில் பாஜக உறுப்பினர்கள் தான் பெரும்பான்மையாக இருப்பார்கள் அவர்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களை புறம் தள்ளுவார்கள் என்கிற கருத்து நிலவுகிறது.

அந்த கணிப்புதான் தற்பொழுது உண்மையாக இருக்கிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்றிவிட்டு தங்களுடைய ஆதரவாளர்களைக் கொண்டு ஒரு நிலைப்பாட்டிற்கு அவர்கள் வந்துள்ளார்கள்.

எதிர்க்கட்சிகளின் உணர்வுகளை ஒன்றிய அரசு எப்போதும் மதித்ததில்லை. ஒன்றிய அரசு தமிழகத்தை எப்பொழுதும் புறக்கணித்தே வருகிறார்கள். அதுதான் வரும் பட்ஜெட்டிலும் நடக்கப்போகிறது. இருந்த போதும் தமிழ்நாட்டின் பிரதிநிதிகளாக நாங்கள் பாராளுமன்றத்தில் பேசுவோம் தமிழ்நாட்டிற்கு தேவையானதை கேட்டு வலியுறுத்துவோம்.

விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை நிறைவேற்றுவோம் என மத்திய அரசு தெரிவித்ததன் அடிப்படையில் தான் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டார்கள் ஆனால் இதுவரை அந்த சட்டம் நிறைவேற்றப்படவில்லை வரும் கூட்டத்தொடரிலாவது அதை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
க.சண்முகவடிவேல்

Thirumavalavan Central Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment