வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் 6வது முறையாக போட்டியிடுகிறார். முழு சொத்து மதிப்பு பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
இதையொட்டி அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் அவரது சொத்து மதிப்புகள் குறித்த முழு விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் முழு சொத்து மதிப்பு ரூ. 2.43 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ. 2.07 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அசையா சொத்து ரூ. 36.57 லட்சம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கடன் ரூ. 83, 869 கோடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரின் ஆண்டு வருவாய் 2018-19 – ரூ.13.33 லட்சம் என்றும். 2019-முதல் 2020 வரை ரூ.13.33 லட்சம் என்றும், 2023-24 ரூ 13.83 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் மீது 7 குற்ற வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
2019 மக்களவை தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் சொத்து – ரூ.92 லட்சம் என்றும் கடன் ரூ.3.94 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது 3 குற்ற வழக்கங்கள் நிலுவையில் இருந்தது குறிப்பிடதக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“