Advertisment

'தமிழிசை குடிக்க மாட்டார் என நம்புகிறேன்': திருமா பதிலடி

மது ஒழிப்பு மாநாடு நடத்தும் திருமாவளவன், ஏன் காந்திக்கு அஞ்சலி செலுத்தவில்லை என்று கேள்வி எழுப்பிய தமிழிசை சௌந்தரராஜன், “ஒருவேளை குற்ற உணர்வு குறுகுறுக்கிறதோ என்னமோ” என்று விமர்சித்திருந்த நிலையில், திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Tamilisai Thiruma

மது ஒழிப்பு மாநாடு நடத்தும் திருமாவளவன், ஏன் காந்திக்கு அஞ்சலி செலுத்தவில்லை என்று கேள்வி எழுப்பிய தமிழிசை சௌந்தரராஜன், “ஒருவேளை குற்ற உணர்வு குறுகுறுக்கிறதோ என்னமோ” என்று விமர்சித்திருந்த நிலையில், திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.

மது ஒழிப்பு மாநாடு நடத்தும் திருமாவளவன், ஏன் காந்திக்கு அஞ்சலி செலுத்தவில்லை என்று கேள்வி எழுப்பிய தமிழிசை சௌந்தரராஜன்,  “ஒருவேளை குற்ற உணர்வு குறுகுறுக்கிறதோ என்னமோ, நமக்கு இருக்கிற கொள்கைக்கு நாம் காந்திக்கு எல்லாம் மாலை போடக்கூடாது என நினைத்தாரோ என்னவோ எனக்கு தெரியவில்லை” என்று  திருமாவளவனை விமர்சித்திருந்தார். இதற்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisment


மகாத்மாக காந்தி பிறந்தநாளில் காந்தி மண்டபத்தில் அஞ்சலி செலுத்திய பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது: “இன்றைக்கு மது ஒழிப்பு மாநாடு என்று ஒரு மாநாடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் ஏற்கெனவே சொன்னேன், திருச்சியில் ஆரம்பித்து சிரிச்சுப் போய்க்கொண்டிருந்தது என்று இந்த மாநாடு என்பதும் அதுதான். இன்றைக்கு மது ஒழிப்பு மாநாடு என்பது மகளிர் மாநாடாக மாற்றப்பட்டிருக்கிறது என்று கேள்விப்பட்டேன். மது ஒழிப்பு மாநாட்டிற்கு அவர்கள் கட்சியிலேயே ஆதரவு இல்லை என்பதையும் நான் கேள்விப்பட்டேன். இதுதான் அவர்களின் கொள்கை. அதுமட்டுமல்ல, நான் கேள்விப்பட்டது உண்மையா இல்லையா என்று தெரியவில்லை. திருமாவளவன் காந்தியைத் தவிர்த்துவிட்டு காமராஜருக்கு மரியாதை செலுத்த சென்றிருக்கிறார். காமராஜருக்கு அஞ்சலி செலுத்தியதில் மிக்க மகிழ்ச்சி. ஆனால், மது ஒழிப்பு மாநாடு நடத்துபவர், ஏன் காந்தியைத் தவிர்த்தார் என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை குற்ற உணர்வு குறுகுறுக்கிறதோ என்னமோ, நமக்கு இருக்கிற கொள்கைக்கு நாம் காந்திக்கு எல்லாம் மாலை போடக்கூடாது என நினைத்தாரோ என்னவோ எனக்கு தெரியவில்லை. அதனால், அது ஏன் அந்த வேறுபாடைக் காண்பிக்கிறார்கள். உண்மையிலேயே மது ஒழிப்பு என்றால் அது மகாத்மா காந்தி அவர்களின் கொள்கை. அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்பதற்காக தோல்வியை ஒப்புக்கொள்கிறார்களோ என்று எனக்கு தெரியவில்லை.” தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

மகாத்மா காந்தி பிறந்தநாளில் அக்டோபர் 2-ம் தேதி வி.சி.க சார்பில் உளுந்தூர்பேட்டையில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெற்றது.   

இந்த மாநாட்டில், வி.சி.க தலைவர் திருமாவளவன், பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு பதிலடி கொடுத்துப் பேசினார். அப்போது திருமாவளவன் பேசியதாவது: “கொள்கைப் பாதையில் திருமாவளவன் முன்வைத்த காலை ஒருபோதும் பின்வைக்க மாட்டான். எனக்கு அப்படி தேவையில்லை. எனக்கு என்ன பயம். எனது கைகள் சுத்தமாக இருக்கின்றன. இன்று காலை காந்தி மண்டபம் போனேன். காந்தி சிலைக்கு மாலைபோட்டுவிட்டு பிறகு காமராஜர் சிலைக்கு மாலை போடலாம் என்று தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். காந்தி மண்டபத்துக்கு போகும்போது, போலீஸ் வந்து, கவர்னர் வருகிறார். கவர்னர் வந்து மாலை போட்ட பிறகுதான் மற்றவர்கள் எல்லாம் மாலை போட வேண்டும் என்று கூறினார்கள்.

அதற்கு முன்னதாகவே போட முடியாதா என்று கேட்டால், சாரி சார் போட முடியாது. ஏன் என்று கேட்டேன். முடியாது என்றார்கள். கவர்னர் வருவதற்கு 10.30  மணி ஆகும். நான் இங்கே மாநாட்டுக்கு உளுந்தூர்பேட்டைக்கு வர வேண்டும். 10.30 மணிக்கு மேல் அங்கே இருந்து புறப்பட்டால் உளுந்தூர்பேட்டை வருவதற்கு 4 மணி நேரம் ஆகும். நான் வருவது என்றால் 6 மணி நேரம் ஆகும். நமது தோழர்கள் வழிமறித்து சந்திப்பார்கள். ஒவ்வொரு டோல்கேட்டிலும் நிறுத்துவார்கள். அவர்களை எல்லாம் சந்தித்துவிட்டு வர வேண்டும். மாநாட்டுக்கு 4 மணிக்கு எல்லாம் வர வேண்டும். அதனால், தாமதமாகிவிடும் என்பதால் காந்தி சிலைக்கு எடுத்துச் சென்ற மாலை என எல்லா மாலையையும் காமராஜர் மண்டபத்தில் மொத்தமாக வைத்து அவருக்கு நினைவஞ்சலி செலுத்திவிட்டு வந்துவிட்டோம்.

ஆனால், ஊடகங்களில் என்ன எழுதுகிறார்கள். மேனாள் ஆளுநர் அக்கா தமிழிசை, காந்தியை அவமதித்துவிட்டார். காந்தி மது ஒழிப்புக்கு போராடியவர், மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறார். அவருடைய கொள்கைக்கு எதிராக இருக்கிறார். அவர்கள் என்ன சொல்ல வருகிறார் என்றால், திருமாவளவன் தினந்தோறும் பாட்டில் திறக்கக்கூடிய ஆள் என்று சொல்ல வருகிறார். அக்கா தமிழிசை நீங்கள் குடிக்க மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்களுக்கு குடிப்பழக்கம் இருக்காது என்று நான் நம்புகிறேன். உங்களைப் போல்தான் நானும் எனக்கு அந்த பழக்கம் இல்லை. 

நான் தடய அறிவியல் துறையில் ஒரு அறிவியல் உதவியாளராக, ஒரு இளநிலை அறிவியல் விஞ்ஞானி என்ற பொறுப்பிலே பணியாற்றியவன். அதில் ஒவ்வொரு 3 மாதத்துக்கும் ஒரு டிவிஷன் மாற்றுவார்கள். அதில் ஒரு டிவிஷன், மதுவிலக்கு துறை. அந்த துறையில், போலீஸ் பிடித்த, கடத்தல் மதுபாட்டில்கள், மது காய்ச்சுவதற்கான ஊரல், மது ஆலைகளில் தயாரிக்கப்படும் பீர், பிராந்தி, விஸ்கி மது பாட்டில்கள் எல்லாம் பாட்டில் பாட்டில்களாக முதலில் அங்கேதான் வரும்.  நாங்கள் அதை பிப்பெட் போட்டு உறிஞ்சி அதை குடுவையில் போட்டு ஆய்வு செய்து, அதில் எவ்வளவு ஆல்கஹால் இருக்கிறது என்று கண்டுபிடிச்சு சர்ட்டிஃபிகேக் கொடுக்கிற இடத்தில் நான் வேலை செய்தேன். அப்போது குடிப்பதாக இருந்தால் குடிக்கலாம். அது யாருக்கும் தெரியாது. டேஸ்ட் பண்ணலாம், ஒரு ஓரத்தில்தான் உட்கார்ந்து வேலை செய்ய வேண்டும். பிப்பெட்டில் வைத்துதான் உறிஞ்ச வேண்டும். நாங்கள் டெஸ்ட் பண்ணி சர்ட்டிஃபிகேட் கொடுத்த பிறகுதான், அது லேபிள் ஒட்டி மார்க்கெட்டுக்குப் போகும். அப்போதுகூட என் நாவில் ஒரு சொட்டு மதுகூட தொட்டதில்லை.

அயல்நாடுகளுக்கு ஃபிளைட்டில் போக்கும்போது, பிசினஸ் கிளாஸில், விமானப் பணிப்பெண்கள் வந்து சார் உங்களுக்கு என்ன வேண்டும். ஒயின் வேண்டுமா, ரெட் ஒயின் வேண்டுமா, வேறு என்ன ஒயின் வேண்டும் என்று கேட்பார்கள். பிஸினஸ் கிளாசில் ஏறினால், தண்ணீர் குடிக்கிறீர்களா என்று கேட்க மாட்டார்கள், சாராயம் குடிக்கிறீர்களா என்று கேட்பார்கள். 12 மணி நேரம், 24 மணி நேரம் ஃபிளைட்டில் உட்கார்ந்துகொண்டு போக வேண்டும். அதனால், வேறு வழியில்லை. எல்லோரும் குடித்துவிட்டுதான் போவார்கள். எத்தனையோ பல நாடுகளுக்கு நான் பயணம் செய்திருக்கிறேன். என் வாழ்நாளில் ஒரு முறைக்கூட மதுவைத் தொட்டதில்லை. 

அக்கா தமிழிசைக்கு நான் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அவர் ஒரு சந்தேகத்தோடு கேட்கிறார். அவர் கொள்கைக்கு முரணாக இருக்கிறதோ என்று கேட்கிறார். காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க சென்றபோது, கவர்னர் மாலை அணிவித்த பிறகுதான் மாலை அணிவிக்க வேண்டும் என்று சொன்னது காவல்துறை. எங்களுக்கு காந்தியோடு நிறைய விமர்சனங்கள் உண்டு அது வேறு. அவருக்கு இந்து மதத்தின் மீது நம்பிக்கை உண்டு. அவருக்கு அடுத்த பிறப்பின் மீது நம்பிக்கை உண்டு. அவருக்கு சனாதனத்தின் மீது நம்பிக்கை உண்டு. சாதியக் கட்டமைப்பு மீது நம்பிக்கை உண்டு. தீண்டாமை மட்டும்தான் ஒழிக்க வேண்டும் என்று சொன்னார். அதனால்தான், அம்பேத்கருக்கும் காந்திக்கும் மோதல் வந்தது.” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Thirumavalavan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment