விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நடிகர் விஜய் அரசியல் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.
அப்போது, “நடிகர் விஜய் அரசியலுக்கு வரலாம். தொண்டுள்ளத்தோடு அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன். ஆனால் தமிழ்நாட்டில் சினிமாவில் இருக்கும் நபர்கள் மார்க்கெட் இழந்த பின்பு, அரசியலுக்கு நுழைகிறார்கள்.
இந்த சாபக்கேடு தமிழ்நாட்டில் மட்டும்தான் நடைபெறுகிறது. இந்தியாவில் வேறு எங்கும் நடைபெறவில்லை.
அவர் முற்போக்கு சார்ந்த களப்பணி ஆற்ற வேண்டும் என்றார். முன்னதாக நடிகர் விஜய், அம்பேத்கர், பெரியார் பற்றி படிக்க கூறியுள்ளார். அவரின் அரசியல் திராவிடத்தின் நீட்சியா அல்லது ஆன்மிக அரசியலா என செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.
அதற்கு திருமாவளவன், “இதை நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும்” என்றார். நடிகர் விஜய் அண்மையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த பள்ளி மாணவ-மாணவியரை அழைத்து பாராட்டினார்.
இதைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் அரசியல் வருகை தொடர்பாக பேச்சுகள் எழுந்துள்ளன. நடிகர் விஜய் அந்த விழாவில் மாணவர்கள் மத்தியில், அம்பேத்கர், பெரியார், காமராஜரை படிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“