மத்திய அரசு ஆளுநர் ஆர்.என். ரவியை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க தலைமையின் கீழ் மாபெரும் போராட்டம் நடத்தப்பட வேண்டும்” என்று திருமாவளவன் அழைப்பு விடுத்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் உத்தரவு ஜனநாயகத்துக்கும், அரசியல் சாசனத்துக்கும் எதிரானது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் திராவிடர் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளன.
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்து, அந்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக அறிவித்த அடுத்த நாள், ஆளும் தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் வெள்ளிக்கிழமை கண்டனம் தெரிவித்தன.
“அவரது நடவடிக்கைகள் ஆளும் தி.மு.க அரசுக்கு சிக்கலை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளன. ஆளுநரின் இந்த செயலை வி.சி.க கண்டிக்கிறது. தற்போது ஆளுநர் தனது உத்தரவை திரும்பப் பெற்றாலும், தி.மு.க-வுக்கு ஏதாவது ஒரு வகையில் அவர் நெருக்கடி கொடுப்பார்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். “முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, மணிப்பூர் மற்றும் ஆளுநர் விவகாரம் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு ஆளுநர் ஆர்.என். ரவியை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க தலைமையின் கீழ் மாபெரும் போராட்டம் நடத்தப்பட வேண்டும்” என்று திருமாவளவன் கூறினார்.
“குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள 37 மத்திய அமைச்சர்களை” பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லிக்கு கடிதம் எழுதுவீர்களா என்று ஆளுநரிடம் கேட்டு, சென்னை முழுவதும் ஒரு சில பகுதிகளில் சுவரொட்டிகள் பரவியபோதும் திருமாவளவனின் கருத்துக்கள் வந்தன. தி.மு.க ஆதரவாளரான வக்கீல் ஹேமந்த் அண்ணாதுரை ஆளுநரிடம் கேள்வி எழுப்பும் போஸ்டர்களை ஒட்டியுள்ளார்.
இதனிடையே, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி விடுத்துள்ள அறிக்கையில், ஆளுநரின் உத்தரவு அதிகார துஷ்பிரயோகத்துக்கு எடுத்துக்காட்டு. அரசியல் சாசனத்துக்கும், திமுகவுக்கும் எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது குடியரசுத் தலைவர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது நியாயமான விசாரணை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை மோசமாக பாதிக்கும் என்பதால், செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என். ரவி வியாழக்கிழமை தெரிவித்தார்.
கடந்த 2015-ம் ஆண்டு வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்க்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்க இயக்குனரகத்தால் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, இருதய பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பிறகு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஆளுநரின் சமீபத்திய நடவடிக்கை மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசுக்கும் ராஜ்பவனுக்கும் இடையிலான உறவை மேலும் சீர்குலைத்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"