/indian-express-tamil/media/media_files/OzMccky18h5J4lXO4D4V.jpg)
"பா.ஜ.க புதிய பாரதம், ராம ராஜ்ஜியம் உள்ளிட்ட கொள்கைகள் பார்ப்பனிய தர்மத்தை பாதுகப்பதற்காக அமைக்கப்பட்டது" - வி.சி.க தலைவர் திருமாவளவன்
Thirumavalavan: சென்னையில் வி.சி.க தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியது பின்வருமாறு:-
ஆளுநர் ரவி இல்லை ஆர்.எஸ்.எஸ் ரவி. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆர்.எஸ்.எஸ் -ன் ஒட்டு மொத்த குரலாக ஒலிக்கிறார். கோதண்டராமர் கோவில் பூசாரிகள் ஆர்.என்.ரவி முகத்தில் கரியைப் பூசியுள்ளார்கள்.
பிரதமர் மோடியின் ஆட்சியில் ஏற்பட்ட அவலங்களை மறைக்கும் வகையில் அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழா நடந்துள்ளது. அப்பாவி இந்து மக்களை அடிமை படுத்தபட்டு வருகின்றனர். மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் சமூக நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற ஜனநாயக மாண்புகள் சிதைக்கபட்டும்.
பா.ஜ.க புதிய பாரதம், ராம ராஜ்ஜியம் உள்ளிட்ட கொள்கைகள் பார்ப்பனிய தர்மத்தை பாதுகப்பதற்காக அமைக்கப்பட்டது. இந்திய மக்கள் கல்வி, சமத்துவம் , பாதுகாப்பு, விடுதலை, இட ஒதுக்ககீடு போன்ற அடிப்படை உரிமைகளை வேண்டி போராடாமல் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று இந்திய மக்களை கோஷமிட வைத்துள்ளனர். அயோத்தியில் நேற்று நடைபெற்றது பொய்யை உண்மையாகவும், புராணத்தை வரலாற்றாகவும் மாற்றும் அவலம். ஜனநாயகத்தின் விழுமியங்களை காக்க வேண்டிய நெருக்கடி இந்திய நாட்டில் ஏற்பட்டுள்ளது. இந்திய நாடெங்கும் ஜாதி, மதத்தின் பெயரால் வன்முறை கொடுமைகள் தலைவிரித்தாடுகின்றன.
இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.