திருமாவளவன் பிறந்தநாளில் குடும்பத்தில் நடந்த துயரம்; சிற்றனை மரணம்

வி.சி.க தலைவர் திருமாவளவன் தனது 63-வது பிறந்தநாளைக் கொண்டாடிவரும் நிலையில், அவருடைய சிற்றன்னை செல்லம்மாள் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 78.

வி.சி.க தலைவர் திருமாவளவன் தனது 63-வது பிறந்தநாளைக் கொண்டாடிவரும் நிலையில், அவருடைய சிற்றன்னை செல்லம்மாள் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 78.

author-image
WebDesk
New Update
Thirumavalavan 2x

“தனது சிற்றன்னை செல்லம்மாள் (78)அவர்கள் சற்றுமுன் இயற்கை எய்தினார்” என்று வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

வி.சி.க தலைவர் திருமாவளவன் தனது 63-வது பிறந்தநாளைக் கொண்டாடிவரும் நிலையில், அவருடைய சிற்றன்னை செல்லம்மாள் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 78.

Advertisment

தனது சிற்றன்னை மரணம் குறித்து வி.சி.க தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “எனது சிற்றன்னை செல்லம்மாள் (78)அவர்கள் சற்றுமுன் இயற்கை எய்தினார்.

கடந்த ஆகஸ் 7-ம் தேதி மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு சுயநினைவு இழந்தநிலையில் பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மிகுந்த கவனத்தோடு மருத்துவர்கள் தீவிர கண்காணிப்புடன் சிகிச்சை அளித்தனர். எனினும், பலனின்றி தற்போது காலமானார் என்பது பெருந்துயரமளிக்கிறது. 

Advertisment
Advertisements

பள்ளிப் பருவத்தில் எனக்கு ஆடை உடுத்தி, தலையில் எண்ணெய்த் தடவி இரட்டை சடைபின்னிவிட்டுப் பள்ளிக்கு அழைத்துச் சென்ற தாய்! தந்தை என்னைக் கண்டிக்கும் போதெல்லாம் எனக்காக வாதாடிய தாய்! வீட்டில் மூத்த மகன் என்பதால் 'பெரியதம்பி, பெரியதம்பி' என்று என்னைச் செல்லமாக அழைத்த தாய்! நான் பட்டவகுப்பை முடித்த காலத்திலிருந்து, 'படித்தது போதும் கல்யாணம் பண்ணு பா' என அறிவுறுத்திய தாய்! பத்தாண்டுகளுக்கு முன்னரே பக்கவாதத்தால் உடல் நலிவுற்று நினைவு தடுமாறி வீட்டிலேயே முடங்கிய நிலையிலும் எப்போதாவது நான் ஊருக்குச் செல்லும்போது, என் குரல் கேட்டதும் 'தம்பீ தம்பீ' என்று ஓடிவந்து என் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு அன்பைப் பொழிந்த தாய்! இன்று எம்மோடு இல்லை என்பது வாழ்வே வெறுமையாய் உள்ளது. துக்கத்தால் மனம் கனக்கிறது. 

அப்பா(2010), அக்கா,(2020), சின்னம்மா (2025)என அடுத்தடுத்து இழப்புகளை எதிர்கொள்ளும் அவலம். துயரங்களைத் தாங்கும் நிலை. அம்மாவுக்கு எனது வீரவணக்கம்!” என்று பதிவிட்டுள்ளார்.

வி.சி.க தலைவர் திருமாவளவனின் 63-வது பிறந்தநாளை அவரது கட்சியினர் கொண்டாடிவரும் நிலையில், அவருடைய சிற்றன்னை உடல் நலக் குறைவால் உயிரிழந்த துயர நிகழ்வு கட்சித் தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Thirumavalavan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: