“தி.மு.க கூட்டணிக்கு ஓ.பி.எஸ், தே.மு.தி.க வந்தால் பிரச்னை இல்லை. கூட்டணி வலிமை பெற்றால் மகிழ்ச்சி தான். யார் யாரெல்லாம் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்தான் முடிவெடுக்க வேண்டும்” என வி.சி.க தலைவர் திருமாவளவன் கூறினார்.
வி.சி.க தலைவர் திருமாவளவன் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “தமிழ்நாட்டிலும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலும் தலித்துகளுக்கும் பழங்குடிகளுக்கும் எதிரான வன்முறை வெறியாட்டங்கள் அதிகரித்து வருகின்றன. அத்துடன் சிறுபான்மைச் சமூகத்தினருக்கு எதிரான வெறுப்பு அரசியலும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. சிறுபான்மை சமூகம் என்கிறபோது இஸ்லாமியர், கிறிஸ்தவர் மட்டுமின்றி பௌத்தர்களும் சமணர்களும் குறி வைக்கப்படுகிறார்கள். பா.ஜ.க ஆட்சி பொறுப்பு ஏற்ற நாளிலிருந்து திட்டமிட்டு இது நிகழ்த்தப்பட்டு வருகிறது.
சிறுபாண்மைச் சமூகங்களை குறிவைக்கும் அதே நேரத்தில், புத்த விகாரர்களை குறிவைப்பது, புத்தர் சிலைகளை இடிப்பது போன்ற நடவடிக்கையில் ஈடுபடும் சங்பரிவார் கும்பல் ஆங்காங்கே வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திர மாநிலம் மதனப்பள்ளியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆந்திர பிரதேச பொதுச் செயலாளர் வி.டி.என். சிவபிரசாத் கடந்த 20 ஆண்டுகளாக ஒரு மலையில் புத்தருடைய சிலையை நிறுவி பராமரித்து வருகிறார். பொதுமக்கள் அந்த இடத்திற்கு வந்து புத்தரை தரிசித்து வருவது, சுத்த பூர்ணிமா போன்ற நிகழ்வுகளை நடத்துவது eன வாடிக்கையாக இருந்து வருகிறது.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பா.ஜ.க உடன் கைகோர்த்த பிறகு, அங்கே பா.ஜ.க-தான் ஆட்சியை நடத்துகிறது என்று சொல்ல கூடிய அளவுக்கு காவல்துறை வருவாய்த்துறை அதிகாரிகள் சங்பரிவார்களின் தொண்டர்களாக மாறிவிட்டார்கள். அங்கே புத்தர் சிலையை சேதப்படுத்தி இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று. வி.டி.என். சிவப்பிரசாத் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் இடிக்கப்பட்ட புத்தர் சிலையை மீண்டும் அங்கே நிறுவ வேண்டும் என்றும் அவருடைய பராமரிப்பில் இருந்த அந்த பகுதியை இப்போது தடை செய்யப்பட்ட பகுதியாக மாற்றி அரசு வேலி போட்டு அடைத்து வைத்து பொதுமக்கள் நடமாட முடியாமல் தடுத்திருக்கிறார்கள். இதற்கு வி.சி.க வண்மையான கண்டனங்களைத் தெரிவிக்கிறோம். இதனைக் கண்டித்து வி.சி.க சார்பில் விஜயவாடாவில் ஆகஸ்ட் 23ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அந்த ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்க இருக்கிறேன். மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தக்கூடிய மிக மோசமான நடவடிக்கைகளில் பா.ஜ.க சங்க பரிவார் அமைப்புகள் ஈடுபட்டு வருவது கவலை அளிக்கிறது.
தொடர்ந்து பேசிய திருமாவளவன், “பாஜகவின் பிடியிலிருந்து ஓபிஎஸ் வந்ததே மகிழ்ச்சிதான் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சாதிய, மதவாத சக்திகள், வெளிப்படையாக சாதிய, மதவாதத்தைப் பேசுகிற அரசியல் கட்சிகள் தவிர மற்ற அனைத்தும் தோழமைக் கட்சிகள்தான். அவர்களுடன் எங்களால் இணைந்து பயணிக்க முடியும்.
தி.மு.க கூட்டணிக்கு ஓ.பி.எஸ், தே.மு.தி.க வந்தால் பிரச்னை இல்லை. கூட்டணி வலிமை பெற்றால் மகிழ்ச்சி தான். யார் யாரெல்லாம் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும்.
ஓ.பி.எஸ், தே.மு.தி.க, திமுக கூட்டணிக்கு வந்தால் விசிகவுக்கு எந்த பிரச்னையும் இல்லை. பா.ஜ.க-வின் பிடியிலிருந்து ஓ.பி.எஸ் வந்ததே மகிழ்ச்சி தான். கூட்டணி கட்சிகள் நல்லிணக்கத்தோடு தொகுதிகளை பிரித்து கொள்வோம், அதில் பிரச்னையில்லை. ஆணவ கொலைகளைக் தடுக்க மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும்.
தமிழக அரசு சாதி ஆணவ படுகொலைக்கு எதிரான சட்டத்தை இயற்ற வேண்டும்.” என்று திருமாவளவன் கூறினார்.