திருமாவளவன் சகோதரி கொரோனா தொற்றால் மரணம்: தலைவர்கள் இரங்கல்
Thirumavalavan : ஒட்டுமொத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரிடமும் தனது உடன் பிறந்தவர்களாகவே கருதி பாசம் காட்டிய பானுமதியின் திடீர் மறைவு கட்சிக்கு பேரிழப்பாகும்.
Thirumavalavan : ஒட்டுமொத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரிடமும் தனது உடன் பிறந்தவர்களாகவே கருதி பாசம் காட்டிய பானுமதியின் திடீர் மறைவு கட்சிக்கு பேரிழப்பாகும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் சகோதரி பானுமதி கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Advertisment
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.யின் சகோதரி பானுமதி என்கிற வான்மதி (வயது 63) சென்னை கே.கே.நகரில் வசித்து வந்தார். இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 5ம் தேதி காலை 7 மணியளவில் அவர் உயிரிழந்தார். அவரது உடலுக்கு திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார்.
Advertisment
Advertisements
சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி வான்மதியின் உடல் சென்னை மந்தைவெளி கல்லறையில் அடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தநிலையில் அரியலூர் மாவட்டம் அங்கனூரில் வசிக்கும் திருமாவளவனின் தாயார் பெரியம்மாள் தனது மகள் வான்மதியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்தார். இதுதொடர்பாக தமிழக அரசுக்கு திருமாவளவன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அவரது கோரிக்கை ஏற்கப்பட்டது. இதையடுத்து வான்மதியின் உடல் அடக்கம் செய்வதற்காக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அரியலூர் மாவட்டத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு வான்மதியின் உடலுக்கு இறுதிச்சடங்குகளை திருமாவளவன் செய்தார்.
தலைவர்கள் இரங்கல் : திருமாவளவன் சகோதரி வான்மதி மறைவுக்கு துணை முதல்வர் பன்னீர் செல்வம், தி.மு.க. தலைவர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திருநாவுக்கரசர் எம்.பி. ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தினகரன் இரங்கல் : ''விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல்.திருமாவளவன் அவர்களின் அன்புச்சகோதரி திருமதி.பானுமதி அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன். அன்னாரை இழந்து வாடும் சகோதரர் திரு.திருமாவளவன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்''.
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல்.திருமாவளவன் அவர்களின் அன்புச்சகோதரி திருமதி.பானுமதி அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். 1/2 @thirumaofficial
சீமான் டுவீட் : ''விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் நேசத்திற்குரிய சகோதரி திருமதி பானுமதி அவர்கள் மறைந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன். அண்ணன் திருமாவளவன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்''.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் நேசத்திற்குரிய சகோதரி திருமதி பானுமதி அவர்கள் மறைந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன். அண்ணன் திருமாவளவன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஒருவாரம் துக்கம் : ஒட்டுமொத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரிடமும் தனது உடன் பிறந்தவர்களாகவே கருதி பாசம் காட்டிய பானுமதியின் திடீர் மறைவு கட்சிக்கு பேரிழப்பாகும். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக கட்சியின் கொடிகளை ஒரு வார காலத்துக்கு அரைக்கம்பத்தில் பறக்க விட்டு, துக்கம் கடைபிடிக்குமாறு விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil