Advertisment

திருமாவளவன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu News Today Live

Tamil Nadu News Today Live

அப்பல்லோ மருத்துவமனை:

Advertisment

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று (3.9.18) அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல் ஒவ்வாமை ஏற்பட்டிருப்பதால் திருமாவளவன்  சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

விழுப்புரத்தில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோதும் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடற்சோர்வு, தூக்கமின்மை, நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் இருப்பதால் உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும், ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர். சென்னை திரும்பிய பிறகு இன்று காலை மீண்டும் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சாதாரண பரிசோதனைக்காகவே  திருமாவளவன்அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவரை நன்கு ஓய்வெடுக்கச் அறிவுறுத்தியுள்ளனர். விரைவில் அவர் வீடு திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thirumavalavan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment