உள்நோக்கம் ஏதுமில்லை; தோழர்கள் பொருத்தருளவும்: தொல். திருமாவளவன்

சமீபத்தில் மாற்றுத்திறனாளிகள் குறித்த தொல்.திருமாவளவனின் பேச்சு கண்டனங்களை குவித்தது.

சமீபத்தில் மாற்றுத்திறனாளிகள் குறித்த தொல்.திருமாவளவனின் பேச்சு கண்டனங்களை குவித்தது.

author-image
WebDesk
New Update
Thirumavalavans explanation of the speech related to the differently abled

மாற்றுத்திறனாளிகள் தொடர்பான பேச்சு குறித்து திருமாவளவன் விளக்கம்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி. சமீபத்தில் பேசுகையில், “தனது திருமண விருப்பங்கள் குறித்து பேசுகையில், மாற்றுத்திறனாளிகள் உடன் தொடர்புபடுத்தி பேசினார்.
இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் பலதரப்பட்ட தலைவர்களும் தொல். திருமாவளவனுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

Advertisment

இது குறித்து ட்விட்டரில் அவர் விளக்கம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த விளக்கத்தில், “உள்நோக்கம் ஏதுமில்லை.. தோழர்கள் பொறுத்தருளவும்!
கடந்த சூன்-30 அன்று மேலவளவில் நடந்த "மேலவளவுப் போராளிகளின் வீரவணக்க நினைவேந்தல்" நிகழ்வில் உரையாற்றும் போது மாற்றுத் திறனாளிகள் மனம்நோகும் வகையில் ஓரிரு சொற்கள் தவறி விழுந்துவிட்டன. அப்போதே அதற்கு எனது வருத்தத்தையும் தெரிவித்தேன்.

மாற்றுத்திறனாளிகளின் நலன்களுக்காகவும் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல்கொடுத்து வருகிற இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
நான் ஒருபோதும் மாற்றுத்திறனாளிகளைக் காயப்படுத்தும் உள்நோக்கமோ, அவர்களைப்பற்றி இளக்காரமான மதிப்பீடோ கொண்டவனுமில்லை. இதனை மாற்றுத் திறனாளிகளுக்கான இயக்கத்தை நடத்தும் முன்னணி பொறுப்பாளர்கள் பலரும் அறிவர்.

என்னைப்பற்றி தனிப்பட்டமுறையில் அவதூறுபரப்பும் ஒருசில அற்பர்களைக் கண்டிக்கும் வகையில் நான் ஆதங்கப்பட்டு எனது உரையின் போக்கிலேயே தன்னிலை விளக்கம் அளித்தேன். அப்போது அச்சொற்கள் என்னையும் அறியாமல் தவறுதலாக நா தவறி வந்து விழுந்தன. அதற்காக உடனே எனது வருத்தத்தையும் வெளிப்படுத்தினேன்.

Advertisment
Advertisements

இனி அவ்வாறு நிகழாவண்ணம் பார்த்துக்கொள்கிறேன். வருந்துகிறேன். மாற்றுத்திறனாளிகள் தோழர்கள் பொறுத்தருளவும். இவண்: தொல்.திருமாவளவன்” எனத் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Thirumavalavan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: