திருநெல்வேலி இளம்பெண் படுகொலை: தொல். திருமாவளவன் அறிக்கை

ராஜேஷ் கண்ணன் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான வழக்கை விரைந்து நடத்தி உரிய தண்டனை கிடைக்க ஆவன செய்ய வேண்டுமென அரசை வலியுறுத்துகிறோம்.

ராஜேஷ் கண்ணன் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான வழக்கை விரைந்து நடத்தி உரிய தண்டனை கிடைக்க ஆவன செய்ய வேண்டுமென அரசை வலியுறுத்துகிறோம்.

author-image
WebDesk
New Update
திருமாவளவன்

சாதிவெறி - மதவெறி தாக்குதல்களை தடுத்திடும் வகையில் தனி நுண்ணறிவுப் பிரிவு ஒன்றை உருவாக்கிட வேண்டும் என தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

Tirunelveli Sandhya murder case : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான தொல். திருமாவளவன் திருநெல்வேலியில் இளம்பெண் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “திருநெல்வேலி மாவட்டம் திருப்பணி கரிசல்குளத்தைச் சார்ந்த இளம்பெண் சந்தியா (வயது 18) என்பவர் நேற்று கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 
ராஜேஷ் கண்ணன் என்பவர் சந்தியாவை ஒருதலையாகக் காதலித்து வந்ததாகவும் தன்னுடைய காதலை சந்தியா ஏற்க மறுத்ததாகவும் தெரியவருகிறது.

Advertisment

படுகொலை

இதனால் விரக்தியடைந்த ராஜேஷ் கண்ணன் ஆத்திரப்பட்டு சந்தியாவை அவர் வேலை பார்த்து வந்த கடையில் வைத்தே வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.
ராஜேஷ் கண்ணன் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான வழக்கை விரைந்து நடத்தி உரிய தண்டனை கிடைக்க ஆவன செய்ய வேண்டுமென அரசை வலியுறுத்துகிறோம். 

Advertisment
Advertisements

பாதிக்கப்பட்ட சந்தியா அவர்களின் குடும்பத்தினருக்கு எஸ்சி / எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி அரசு வழங்க வேண்டிய நிவாரணத் தொகை மற்றும்  குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர அரசுப் பணி ஆகியவற்றை விரைந்து வழங்கிட வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். 
தென் மாவட்டங்களில் தொடரும் சாதியப் படுகொலைகளையும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளையும், மாணவர்களுக்கு இடையே ஏற்படும் சாதிய மோதல்களையும் தடுத்து நிறுத்திடும் வகையில் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

அத்துடன், சாதிவெறி - மதவெறி தாக்குதல்களை தடுத்திடும் வகையில் தனி நுண்ணறிவுப் பிரிவு ஒன்றை உருவாக்கிட வேண்டும் என்கிற எமது நீண்ட நாள் கோரிக்கையை மீண்டும்  வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Thirumavalavan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: