New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/24/thirumavalavan-vck-2025-06-24-22-47-11.jpg)
வி.சி.க விருதுகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
“எங்கள் இயக்கம் சட்டமன்ற, நாடாளுமன்ற சீட்டு பேரம் பேசுவதற்கு அல்ல என்றும் ஒருநாள் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றுகூட நான் அறிவித்துவிடுவேன்” என்றும் திருமாவளவன் பேசினார்.
வி.சி.க விருதுகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
வி.சி.க விருதுகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் அம்பேத்கர் சுடர் விருது ஆந்திராவில் உள்ள துணைவேந்தர், திராவிடப் பல்கலைக் கழக மேனாள் முனைவர் கே.எஸ்.சலம் அவர்களுக்கு வழங்கபட்டது. நடிகர் சத்யராஜ்-க்கு பெரியார் ஒளி விருதும், தமிழ்த்தேசிய விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தியாகு-வுக்குமார்க்ஸ் மாமணி விருதும் புதுச்சேரி மேனாள் முதலமைச்சர் வெ.வைத்திலிங்கம் எம்.பி-க்கும் காமராசர் கதிர் விருதும், பௌத்த அறிஞர் முனைவர் பா.ஜம்புலிங்கத்திற்கு அயோத்திதாசர் ஆதவன் விருதும் வழங்கப்பட்டது.
மேலும், காயிதேமில்லத் பிறை விருது தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை தலைவர் பி.ஏ.காஜா முயீனுத்தீன் பாக்கவி-க்கும்
யாழ்பாணம் தமிழறிஞர் செம்மொழி ஞாயிறு விருது பேராசிரியர் அ.சண்முகதாஸ்-க்கும் வி.சி.க விருதுகள் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் விருதுகள் வழங்கிய திருமாவளவன் பேசியதாவது: “தமிழ்நாடு அரசியலை நாம் கூர்மைப்படுத்துகிறோம்; சனாதன சக்திகள் தமிழ்நாடு மண்ணை நஞ்சாக்க விடமாட்டோம். சனாதன சக்திகளா?, விடுதலை சிறுத்தைகளா? என்பதுதான் தமிழ்நாட்டு பாலிடிக்ஸ். தமிழ்நாட்டு அரசியலை மதவாத அரசியலை நோக்கி மடைமாற்றம் செய்ய பலர் முயற்சிக்கின்றனர்.
மதச்சார்பின்மைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க செயல்படுவதால் அது கூர்மைப்படுகிறது. மதச்சார்பின்மை கூர்மைப்படக் காரணமான ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வுக்கு நன்றி. தேர்தல் கட்சி என்ற வகையில் பா.ஜ.க-வை எதிர்க்கவில்லை; அவர்களின் அரசியலை எதிர்க்கிறோம்.
நாட்டில் அமையும் அரசு மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும்; பா.ஜ.க-வோ அரசமைப்பை எறிய நினைக்கிறது. நாம் கொடியேற்ற, பேனர் கட்ட, பொதுக்கூட்டங்களை நடத்த போராட வேண்டியுள்ளது எங்கள் இயக்கம் சட்டமன்ற, நாடாளுமன்ற சீட்டு பேரம் பேசுவதற்கு அல்ல; ஒருநாள் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றுகூட நான் அறிவித்துவிடுவேன். இருக்கையில் எனக்கு நம்பிக்கை இல்லை; பிளாஸ்டிக் சேர், தரையில் கூட அமருவேன்.
இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது; ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகு இந்து மதம் வந்தது; பிற மதங்களில் சகோதரத்துவம் உள்ளது; இந்து மதம் அடிப்படையிலேயே பாகுபாடு கொண்டது; அணு ஆயுதங்களால் கூட தகர்க்க முடியாதது இந்தியாவில் உள்ள சாதிய கட்டமைப்பு. இந்து மதம் அடிப்படையிலேயே பாகுபாடு கொண்டது; அணு ஆயுதங்களால்கூட தகர்க்க முடியாதது இந்தியாவில் உள்ள சாதிய கட்டமைப்பு; எங்கள் இயக்கம் சட்டமன்ற, நாடாளுமன்ற சீட்டு பேரம் பேசுவதற்கு அல்ல; ஒருநாள் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றுகூட நான் அறிவித்துவிடுவேன். இருக்கையில் எனக்கு நம்பிக்கை இல்லை. பிளாஸ்டிக் சேர், தரையில்கூட அமருவேன்.
திருநீரை அழித்தது பற்றி பேசுவோர் என்னை மேல்பாதி கோயிலுக்குள் அழைத்து செல்ல முடியுமா?. புண்ணியம் கிடைக்குமென திருநீறு பூசவில்லை; அவமதிக்கும் நோக்கில் அதை அழிக்கவும் இல்லை. என்னை சங்கராச்சாரியராக்க வேண்டாம்; சகோதரனான ஏற்றுக்கொள்ளத்தான் சொல்கிறேன்.” என்று திருமாவளவன் பேசினார்.
பெரியார் ஒளி விருது பெற்ற நடிகர் சத்யராஜ் பேசுகையில், “கடவுள் ஒழிப்பு முக்கியம் இல்லை; சாதி ஒழிப்பும் தமிழ் தேசியம்தான். தமிழன்தான்தான் தமிழனை வெட்டுகிறான். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் திருமாவளவன் குறித்த புத்தகம் வெளியிட்டுள்ளனர்” என்றும் குறிப்பிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.