திருமுருகன் காந்தி மருத்துவமனையில் அனுமதி: வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நேற்று நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
52 நாட்கள் சிறையில் காலம் கழித்த அவர் தனிச்சிறை மற்றும் சுகாதாரமில்லாத உணவு போன்ற காரணங்களால் உடல் நிலை பாதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவருக்கு குடற்புண், தலைவலி போன்றவை ஏற்பட வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் அனைத்திலிருந்தும் நேற்று அவருக்கு பிணை வழங்கப்பட்டது. இது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க.
திருமுருகன் காந்தி மருத்துவமனையில் அனுமதி
வேலூர் சிறையில் இருந்து வெளியேறிய திருமுருகன் காந்தியை சென்னையில் நேற்றிரவு 11.30 மணிக்கு மருத்துவர் எழிலன் பரிசோதனை செய்தார். பின்னர் அவரின் அறிவுத்தலின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு திருமுருகன் காந்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான தகவலை மே பதினேழு இயக்கத்தின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்கள் மே 17 இயக்கத்தினர்.