ஜெர்மனி ஐ.நா பங்கேற்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய திருமுருகன் காந்தி கைது. பெங்களூரூ விமான நிலையத்தில் வந்திறங்கியபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரூ விமான நிலையத்தில் நடத்த கைது :
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ஜெர்மனியில் நடைபெற்ற ஐ. நா மாநாட்டில் பங்கேற்க சென்றிருந்தார். அங்கு பங்கேற்றுவிட்டு இன்று இந்தியா திரும்பியபோது பெங்களூரூ விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் கைது தொடர்பாக மே 17 இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் “ தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் திருமுருகன் காந்தி பதிவு செய்துவிட்டு திரும்பிய போது, பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளார். வரும் ஞாயிறு அன்று பெங்களூரில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காரணத்தினால் பெங்களூர் விமான நிலையத்தில் இன்று காலை வந்து இறங்கினார்.
இந்நிலையில் தூத்துக்குடி படுகொலையை ஐ.நாவில் பேசியதற்காக பழைய போராட்ட வழக்குகளை காரணம் காட்டி அவர் பெங்களூரில் கைது செய்யள்ளார்.” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜெர்மனியில் நடைபெற்ற ஐ. நா கூட்டத்தில், விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க கோரியும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் 8 வழிச்சாலை விவகாரங்கள் குறித்தும் அவர் பேசியதாக கூறப்படுகிறது.
திருமுருகன் காந்தி மீது தேச துரோக வழக்கு நிலுவையில் உள்ளதால், அவர் எந்த விமான நிலையம் வந்தாலும் உடனே கைது செய்யும்படி நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாக அவரை கைது செய்த போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கைது குறித்து தமிழக போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது