திருப்பரங்குன்றம் ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. திடீர் மரணம்: இபிஎஸ்-ஓபிஎஸ் நேரில் அஞ்சலி

ஏ.கே.போஸ் ஏற்கனவே 2 முறை சட்டமன்றத் தேர்தலில் வென்று எம்.எல்.ஏ.வாக இருந்தவர்!

AK Bose MLA Expired: திருப்பரங்குன்றம் ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. திடீர் மரணம் அடைந்தார்.  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் வந்து ஏ.கே.போஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். திரளான அமைச்சர்களும் வந்திருந்தார்கள்.

மதுரையில் அதிமுக எம்.எல்.ஏ ஏ.கே.போஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், ‘அதிமுகவில் விசுவாசமிக்க தொண்டனாக பணியாற்றியவர் ஏ.கே.போஸ். கட்சி பணியில் சிறப்பாக செயல்பட்டவர். தன்னுடைய உழைப்பால் கட்சியில் படிப்படியாக முன்னேறியவர்.’ என்றார்.

AK Bose, AIADMK MLA AK Bose Passes Away, EPS, OPS, ஏ.கே.போஸ் மரணம், அதிமுக எம்.எல்.ஏ. போஸ் மரணம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் வந்து ஏ.கே.போஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், ‘மக்களுக்காக உழைத்து வந்த ஏ.கே.போஸின் மறைவு அதிமுகவுக்கு பேரிழப்பு.
ஏ.கே.போஸை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்’ என்றார்.

முன்னர் வந்த செய்தி:

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்து வந்தவர் ஏ.கே.போஸ்! 2016 சட்டமன்ற பொதுத்தேர்தலில் இந்தத் தொகுதியில் வென்ற சீனிவேலு பதவியேற்காமலேயே மரணம் அடைந்த நிலையில், அதே ஆண்டு நவம்பரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் இங்கு ஜெயித்தார் போஸ்!

Thiruparankundram AK Bose MLA Expired, AK Bose MLA Death, ஏ.கே.போஸ், ஏ.கே.போஸ் மரணம்

AK Bose MLA Expired: ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. ஜெயலலிதாவை சந்தித்த பழைய புகைப்படம்

திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.வாக கடந்த 18 மாதங்களாக செயல்பட்டு வந்த ஏ.கே.போஸ் நேற்று இரவு திடீரென மாரடைப்பால் காலமானார். அவரது உடல் மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.

ஏ.கே.போஸ் உடலுக்கு அதிமுக.வினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று (ஆகஸ்ட் 2) மாலை 5 மணிக்கு ஏ.கே.போஸுக்கு இறுதி நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

ஏ.கே.போஸ் ஏற்கனவே 2 முறை சட்டமன்றத் தேர்தலில் வென்று எம்.எல்.ஏ.வாக இருந்தவர்! ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு டிடிவி தினகரன் அணிக்கு ஆதரவாக இருந்த ஏ.கே.போஸ் பிறகு எடப்பாடி அணிக்கு ஆதரவாக திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close