திருப்போரூர் சிறுமி கற்பழிப்பு: வாலிபருக்கு சாகும் வரை தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு!

அசோக்குமாரை சாகும் வரை தூக்கிலிட வேண்டும்

Tamil Nadu News Today Live, Tamil Nadu News in Tamil Live
Tamil Nadu News Today Live, Tamil Nadu News in Tamil Live

காஞ்சிபுரம் அருகே திருப்போரூரில் 2017ம் ஆண்டு 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இளைஞருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் அருகே ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்த 9ம் வகுப்பு படித்து வந்த சிறுமியை பக்கத்து வீட்டுக்காரரான 24 வயதுடைய அசோக் என்பவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பினர்.

காவல்துறை நடத்திய விசாரணையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, உடலைக் கைப்பற்றி விசாரணையை தொடங்கிய போலீசார் அக்கம்பக்கத்து வீட்டார் அளித்த தகவலின் அடிப்படையில் அசோக்கை கைது செய்தனர். பின்னர் குண்டர் சட்டத்தில் அசோக் குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அசோக்குமாரை சாகும் வரை தூக்கிலிட வேண்டும் என்று செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Web Title: Thiruporur girl raped and murdered case death penalty

Next Story
தமிழக அரசின் ரூ.2000 நிதியுதவி திட்டத்திற்கு எதிரான மனு தள்ளுபடிsenthil balaji plea dismissed against karur EC Officer - தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கைக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express