5 States Poll Dates announced: மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்பட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் இன்று மாலை அளித்த பேட்டியில் இதை வெளியிட்டார். தமிழ்நாட்டின் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. பருவமழை காரணமாக தற்போது நடத்த தேவையில்லை என தமிழக தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியதாகவும் அதனால் நடத்தவில்லை என்றும் தலைமை தேர்தல் அதிகாரி ஓ.பி.ராவத் கூறினார்.
திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டமன்றத் தொகுதிகள் தமிழ்நாட்டில் காலியாக உள்ளன. திமுக தலைவர் கருணாநிதி மறைவைத் தொடர்ந்து திருவாரூர் தொகுதியும், அதிமுக எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் மறைவைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியானதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டன.
தேர்தல் ஆணைய விதிமுறைப்படி இந்தத் தொகுதிகளுக்கு 6 மாதங்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்தச் சூழலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், தெலங்கானா, மிசோராம் மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டியிருக்கிறது. மேற்படி மாநிலங்களில் தெலங்கானா மாநிலத்தில் முன்கூட்டியே அரசு ராஜினாமா செய்ததால் தேர்தல் நடத்தப்பட வேண்டியிருக்கிறது.
இந்த மாநிலங்களிளுக்கான தேர்தல் தேதியை இன்று (அக்டோபர் 6) மாலை 3 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அப்போது திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பருவ மழை காரணமாக திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலை இப்போது நடத்த வேண்டாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கேட்டுக்கொண்டதாக தலைமை தேர்தல் அதிகாரி ஓ.பி.ராவத் கூறினார்.
EC announces poll dates for 5 states; counting on Dec 11: 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு:
3:45 PM: மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக நவம்பர் 28-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் குறிப்பிட்டார்.
3:40 PM: சத்தீஷ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநில தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11-ம் தேதி நடைபெறும் - தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்
Andhra MPs resignations were accepted on June 4. Lok Sabha term expires on June 3; less than 1 year was left. Since there was less than 1 year left for vacancy no by-elections in Andhra Pradesh: CEC OP Rawat on by-polls in #AndhraPradesh after resignations of five YSRCP MPs. pic.twitter.com/CIWGT2efwH
— ANI (@ANI) 6 October 2018
3:35 PM: ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக டிசம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கூறினார்.
3:30 PM : திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. பருவமழை காரணமாக தற்போது நடத்த தேவையில்லை என தமிழக தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியதாகவும் அதனால் நடத்தவில்லை என்றும் தலைமை தேர்தல் அதிகாரி ஓ.பி.ராவத் கூறினார்.
மழைக்காலம் என்பதால் திருவாரூர், திருப்பரங்குன்றம் தேர்தல் இப்பொது இல்லை. #sunnews pic.twitter.com/IhPpE7QpqS
— Sun News (@sunnewstamil) 6 October 2018
3:25 PM: சத்தீஷ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய 4 மாநில தேர்தல்களில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்ளும் வகையில் ஒப்புகைச்சீட்டு எந்திரம் பயன்படுத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கூறினார்.
3:20 PM : சத்தீஷ்கரில் நவம்பர் 12-ம் தேதி முதல்கட்டத் தேர்தல். 2-ம் கட்டமாக அங்கு நவம்பர் 20-ம் தேதி தேர்தல் நடத்தப்படும்.
3:15 PM : டிசம்பர் 15-ம் தேதிக்குள் மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், மிசோராம், ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும் என ராவத் கூறினார். இன்று முதல் அங்கு தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வருவதாக கூறினார்.
3:00 PM: தேர்தல் அறிவிப்பு தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் மற்றும் இரு தேர்தல் ஆணையர்களின் இணைந்த பிரஸ் மீட் தொடங்கியது. பிரஸ் மீட் நேரமாற்றம் கட்டாயத்தின் பேரில் நடந்ததாக ராவத் குறிப்பிட்டார். மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோராம், சத்தீஷ்கர் ஆகிய 4 மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.
2:20 PM : பிரதமர் மோடியின் ராஜஸ்தான் நிகழ்ச்சிக்காக தேர்தல் அறிவிப்பை மாலை 3 மணிக்கு தள்ளி வைத்தது வருத்தத்திற்கு உரியது என முன்னாள் மத்திய அமைச்சரான யஷ்வந்த் சின்ஹா கூறியிருக்கிறார்.
Unfortunate that Election Commission postponed announcement of election dates in 5 states only to enable Modi to address his public meeting in Ajmer, Rajasthan. Very sad.
— Yashwant Sinha (@YashwantSinha) 6 October 2018
1:40 PM: திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் பணியை அதிமுக ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. கடந்த 4-ம் தேதி மதுரையில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 16 அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
அமமுக சார்பில் நாளை (7-ம் தேதி) அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக இருந்தது. மழை காரணமாக அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டால், நலத்திட்ட உதவி வழங்க அனுமதி கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
1:00 PM: திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, அமமுக, பாஜக ஆகிய கட்சிகள் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.கே.நகரில் தோற்ற அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் வரிந்து கட்டி வேலை பார்க்கும் என்பதால் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
12:00 PM: தெலங்கானா மாநிலத் தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுவிடும் என இப்போது வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே 5 மாநிலங்களுக்கு தேர்தல் ஒரே நேரத்தில் நடைபெறும் என தெரிகிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய பெரிய மாநிலங்களில் 3 கட்டமாக தேர்தல் நடைபெறலாம்.
11:50 AM: பகல் 12:30 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் தேதியை அறிவிக்க இருப்பதாக முதலில் செய்திகள் வந்தன. பிறகு பத்திரிகையாளர் சந்திப்பு மாலை 3 மணிக்கு மாற்றி அமைக்கப்பட்டது.
Read More: எனது விசுவாசிகள் கேட்டு கொண்டால் திருவாரூரில் போட்டியிடுவேன் : மு.க. அழகிரி பேட்டி
தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் இன்று பகல் 1 மணிக்கு நடக்கிறது. அதற்காகவே தேர்தல் அறிவிப்பை தள்ளி வைத்திருப்பதாகவும், தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் இதுதானா? என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியிருக்கிறது.
3 Facts- Draw your own conclusions.
1. ECI announces a PC at 12.30 today to announce elction dates to the 5 states.
2. PM Modi is addressing a rally in Ajmer, Rajasthan at 1 PM today.
3. ECI suddenly changes the time of announcement and PC to 3 PM.
Independence of ECI?
— Randeep Singh Surjewala (@rssurjewala) 6 October 2018
11:45 AM : சட்டமன்றம் காலியாக இருக்கிற 5 மாநிலங்களில் தெலங்கானா தவிர, மற்ற 4 மாநிலங்களுக்கும் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் இல்லை என்றாலும், அறிவிப்புக்கான வாய்ப்புகள் அதிகம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.