Advertisment

ம.தி.மு.க-வில் இருந்து திருப்பூர் துரைசாமி விலகல்: வைகோ-வுக்கு கடிதம்

மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
thiruppur duraisamy mdmk

மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தெரிவித்துள்ளார்.

Advertisment

இதைப்பற்றி, மதிமுகவின் மூத்த தலைவர்களுல் ஒருவரும், கட்சியின் அவைத்தலைவருமான திருப்பூர் துரைசாமி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது, “மதிமுக துவக்கப்பட்ட காலத்தில் தாங்கள் வாரிசு அரசியலுக்கு எதிராக உணர்ச்சிமிகு உரைகளை கேட்டே இலட்சக்கணக்கான தோழர்கள் தங்களின் பேச்சில் உறுதியும், உண்மையிருக்கும் என்று நம்பி தங்களை ஆதரித்தனர். ஆனால் தங்கள் குழப்ப அரசியல் நிலைப்பாடு காரணமாக தங்களை ஆதரித்த திமுகவில் பிரிந்துவந்த பெருவாரியான முன்னணித் தலைவர்களும், தோழர்களும் கழகத்தை விட்டு படிப்படியாக வெளியேறி திமுகவிற்கே சென்று விட்டனர்.

திமுகவில் தங்களுக்கு ஒரு இடர்பாடு வந்த போது எந்த குடும்ப அரசியலுக்கு எதிராக தொண்டர்களை தூண்டினீர்களோ அன்று ஒரு நிலைப்பாடும், இன்று அதற்கு நேர் எதிர்மாறாக தங்களின் குடும்பத்தினருக்கு தன்னிச்சையாக கழகத்தில் பொறுப்பு வழங்க முயற்சிக்கும் போது தொண்டர்கள் மத்தியில் தாங்கள் முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாடு எடுப்பதும் மகனை ஆதரித்து, அரவனைப்பதும் தங்களின் சந்தர்பவாத அரசியலையும் பொது வெளியில் கழகத்தினரின் மீது தமிழக மக்கள் எள்ளி நகையாட வைத்துவிட்டது என்பதை தாங்கள் இன்னமும் உணராமல் உள்ளது வருந்ததக்க வேதனையான நிகழ்வு” என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் கட்சியின் நலன் கருதி மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிட வேண்டும் என்று வைகோவிற்கு கோரிக்கை வைத்திருந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Mdmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment