சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில், காவல் நிலையத்தில் நடைபெற்ற விசாரணையின் போது உயிரிழந்த அஜித் குமாரின் மரணத்துடன் தொடர்புடைய விசாரணை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தலைமையில் விசாரணை 4வது நாளாக இன்றும் நடைபெறுகிறது.
இன்று நீதிபதி திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நேரில் வருகை தந்து, காவல் ஆய்வாளர் மற்றும் ஏ.டி.எஸ்.பி உள்ளிட்ட உயர் அதிகாரிகளை நேரில் விசாரணை செய்தார். நிகிதா என்பவர் தாக்கல் செய்த புகார் நேரில் கொடுக்கப்பட்டதா அல்லது தொலைபேசி வாயிலாக தெரிவிக்கப்பட்டதா என்பதை விசாரிக்க உத்தரவிட்டவர் யார் என்பதையும் நீதிபதி கேட்டு தெரிந்து கொண்டார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/05/whatsapp-image-2025-2025-07-05-10-37-22.jpeg)
மேலும், காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சிவக்குமாரிடம் விரிவாக விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. தற்பொழுது டிஎஸ்பி சண்முகசுந்தரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேசமயம், ஏடிஎஸ்பி சுகுமாரன் காவல் நிலையத்திற்கு வருகை தருகிறார்.