Coimbatore, Madurai, Trichy News: தஞ்சை பெரிய கோயிலின் மேம்பாட்டு பணிக்கு முன்னுரிமை: ஒன்றிய அரசு அறிவிப்பு

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
thanjavur

உடல் உறுப்பு தானம்: தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த வைரமுத்து என்ற இளைஞரின் உடல் உறுப்புகளை குடும்பத்தினர் தானம் செய்தனர்.

Advertisment

பனிமய மாதா பேராலயம் திருவிழா: பேராலயத்தின் 443 ஆவது திருவிழா கொடியேற்றத்துடன் விமரிசையாக துவங்கியது. மரியே வாழ்க என விண்ணை பிளக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முழக்கமிட்டனர்.

  • Jul 26, 2025 13:17 IST

    தஞ்சை பெரிய கோயிலின் மேம்பாட்டு பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் : ஒன்றிய அரசு

    தஞ்சை பெரிய கோயிலின் மேம்பாட்டு பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. தஞ்சையில் ஒன்றிய சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தஞ்சை அரண்மனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.”என்றார்.



  • Jul 26, 2025 12:52 IST

    இன்றைய நாளுக்கான மழை அப்டேட்!

    நீலகிரி, கோவை ஆகிய 2 மாவட்டங்களில் இன்று (ஜூலை 26) மிக கனமழைக்கு வாய்ப்பு. தேனி, தென்காசி, நெல்லை ஆகிய 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 



  • Advertisment
    Advertisements
  • Jul 26, 2025 12:21 IST

    கட்டப்பஞ்சாயத்து புகார் - எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்

    கடலூர், விருத்தாசலம் அருகே கடந்த 22ம் தேதி சொத்து பிரச்சனையில் தாயை துப்பாக்கியால் சுட்ட மகன் கைது செய்யப்பட்டார். துப்பாக்கிச்சூடு வழக்கில் கட்டப்பஞ்சாயத்து செய்த‌தாக தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ராஜாராமன், காவலர் சரவணன் ஆகியோரை
    ஆயுதப்படைக்கு மாற்ற வேண்டும் என்று கடலூர் எஸ்பி உத்தரவிட்டுள்ளார். 



  • Jul 26, 2025 12:15 IST

    "நோட்டீசை நீதியரசர் சுவாமிநாதன் திரும்பப் பெற வேண்டும்"

    "வாஞ்சிநாதன் மீது கொடுக்கப்பட்டிருக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நோட்டீசை நீதியரசர் சுவாமிநாதன் திரும்பப் பெற வேண்டும். ஜனநாயகத்தின் குரல் வளையத்தை நசுக்கும் வகையில் நீதிபதி சுவாமிநாதனின் செயல்பாடு உள்ளது." என்று  தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் நா.மாரப்பன் பேட்டியளித்துள்ளார். 



  • Jul 26, 2025 11:59 IST

    மோடியின் ஹெலிகாப்டர் தரையிரங்கும் இடம் மாற்றம்

    பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் தரையிரங்கும் இடம் மாற்றம் செய்யப்பட்டது. கங்கை கொண்ட சோழபுரம் பகுதியில் உயர் மின் அழுத்த கம்பிகள் காரணமாக பிரதமர் மோடி பயணிக்கும் ஹெலிகாப்டர் தரையிரங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொன்னேரியில் ஹெலிபேட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.



  • Jul 26, 2025 11:41 IST

    சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - கைதான நபர் மீது மேலும் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு

    திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நபர் மீது மேலும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 



  • Jul 26, 2025 11:16 IST

    சிறுமி பாலியல் வன்கொடுமை - நண்பர்களுடன் சிக்கிய அண்ணன்

    கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை 3 ஆண்டுகளுக்கு முன், அண்ணன் உறவுமுறை கொண்ட இளைஞர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த இளைஞர் சிறுமிக்கு 13 வயதிலேயே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அவரின் நண்பர்களும் வன்கொடுமை செய்துள்ளனர். அண்ணன் உறவு முறை கொண்ட இளைஞர், அஜய், சூர்ய பிரகாஷ் என்கிற ஆதி சக்தி, அரவிந்த் ஆகிய நால்வர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான அரவிந்தை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். 



  • Jul 26, 2025 10:32 IST

    லாரி டிரைவர் தலை நசுங்கி பலி - போலீஸ் விசாரணை

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள லட்சியம் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி மகன் மகேந்திரன் (48) இவர் லாரி டிரைவர். இவர் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், அதிகாலை தலை நசுங்கி இறந்து கிடந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி எஸ்பி மாதவன் மற்றும் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி தங்கவேல், சின்னசேலம் மற்றும் கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முதல் கட்டமாக இறந்து போன மகேந்திரன் மூன்றாவது மகளுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்ட மாப்பிள்ளையை போலீசார் அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



  • Jul 26, 2025 10:00 IST

    அரியலூரில் பிரதமரின் ஹெலிகாப்டர் தரையிறங்கும் இடம் மாற்றம்

    அரியலூரில் பிரதமரின் ஹெலிகாப்டர் தரையிறங்கும் இடம் மாற்றம். கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் உயர் மின்னழுத்த கம்பிகள் காரணமாக ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது பொன்னேரியில் ஹெலிபேட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.



  • Jul 26, 2025 09:59 IST

    பனிமய மாதா பேராலயம் திருவிழா

    பனிமய மாதா பேராலயம் திருவிழா பேராலயத்தின் 443 ஆவது திருவிழா கொடியேற்றத்துடன் விமரிசையாக துவங்கியது. மரியே வாழ்க என விண்ணை பிளக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முழக்கமிட்டனர்.



Tamilnadu Live News Udpate news updates

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: