ஓடும் ரயிலில் உயிருடன் விளையாடிய மாணவி- மாணவன்: விசாரணையை தொடங்கிய போலீஸ்

சென்னை அருகே கும்மிடிப்பூண்டியில், பள்ளி மாணவி ஒருவர், ஆபத்தான முறையில் புறநகர் ரயிலில் ஏறும் வீடியோ காட்சிகள் வைரலாகி பரபரப்பானது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில்நிலையத்தில் ஆபத்தான முறையில் ரயிலில் ஏறி, சாகசம் செய்த மாணவியை மாவட்ட எஸ்.பி. வருண்குமார் நேரில் அழைத்து அறிவுரை கூறினார்.

ஓடும் ரயிலில் ஏறுவது, குதிப்பது, என வழக்கமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் தான் சாகசம் செய்வார்கள். அதுதொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி பலரின் கண்டனத்தையும் பெறும்.

திருவள்ளூர் மாவட்டம் அடுத்த கும்மிடிப்பூண்டியில் கவரப்பேட்டை ரயில் நிலையம் உள்ளது. இங்கு ரயில் புறப்படும் நேரத்தில், ஓடிவந்த பள்ளி மாணவி வேகமான ஓடும் ரயிலில் ஏறினார். அதோடு  காலை நடை மேடையில் வைத்து உரசியபடி செல்கிறார். அவருடன் மாணவர் ஒருவரும் சிரித்தபடி ரயிலில் ஏறி சாகசம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைப்பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

வழக்கமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் தான் ஓடும் ரயிலில் ஏறுவது, குதிப்பது, என சாகசம் செய்வார்கள். அதுதொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி பலரின் கண்டனத்தையும் பெறும். இந்நிலையில் மாணவி ஒருவர் இவ்வாறு நடந்து கொண்டது பார்ப்போரை பதைபதைக்க வைத்தது.

இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறை விசாரணை நடத்தியபோது, அவர்கள் இருவரும் கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட எஸ்பி வருண் குமார், மாணவி மற்றும் மாணவனை அவர்களது பெற்றோர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து அறிவுரை கூறினார்.

மேலும் இதுபோன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபடாதவாறு பள்ளிகள் கட்டுப்படுத்த வேண்டும். மேலும்  ஒழுங்கின நடவடிக்கை எடுக்கும் மாணவர்கள் மீது, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Thiruvallur district sp given advises to school student who tried to board a train in a dangerous manner

Next Story
டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனத்தை ஆளுநர் ரத்து செய்ய வேண்டும் – மு.க ஸ்டாலின்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com