காட்டுப்பள்ளியில் வடமாநில தொழிலாளர்கள் போராட்டம்: போலீசாருடன் மோதல், கண்ணீர் புகை குண்டு வீச்சு

திடீரென ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் போலீசார் மீது கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 24க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் செய்தியாளர்கள் சிலர் காயமடைந்தனர்.

திடீரென ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் போலீசார் மீது கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 24க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் செய்தியாளர்கள் சிலர் காயமடைந்தனர்.

author-image
WebDesk
New Update
Thiruvallur Kattuppalli North Indian workers protest police lathi charge

Thiruvallur Kattuppalli North Indian workers protest

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர், காட்டுப்பள்ளி அருகே உள்ள எல்&டி கப்பல் கட்டும் தளத்தில் உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளியான அமரேஷ் பிரசாத் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தொழிலாளர்கள் குடியிருப்பு வளாகத்தில் உள்ள கட்டிடத்தின் மாடியிலிருந்து எதிர்பாராத விதமாக விழுந்து உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

அமரேஷ் பிரசாத்தின் மரணத்திற்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், அவரது குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, ஆயிரக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், திடீரென ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் போலீசார் மீது கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர்.

Advertisment
Advertisements

இந்த மோதலில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 24க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் செய்தியாளர்கள் சிலர் காயமடைந்தனர். இதையடுத்து, போலீசார் கூட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் தொழிலாளர்களை விரட்டி அடித்தனர்.

வன்முறையில் ஈடுபட்ட 55க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை போலீசார் பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. 

இதனிடையே உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாகவும், உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்லும் செலவை ஏற்றுக்கொள்வதாகவும் ஒப்பந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: