Tiruvallur Lok Sabha Results 2024: திருவள்ளூர்- காங்கிரஸ் சசிகாந்த் இமாலய வெற்றி
2024 மக்களவை தேர்தலில் திருவள்ளூர் தொகுதி நிலவரம், அதன் வரலாறு கடந்த காலங்களில் கோலோச்சிய அரசியல் கட்சிகள் தொடர்பான பல்வேறு விவரங்களை இங்கு பார்க்கலாம்.
2024 மக்களவை தேர்தல் நாட்டில் 7 கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்.19ஆம் தேதி தொடங்கியது. நிறைவுகட்ட தேர்தல் வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடந்தது. இந்த 7 கட்டங்களில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டன.
Advertisment
முதல்கட்ட நிலவரப்படி காங்கிரஸின் சசிகாந்த் முன்னிலை வகிக்கிறார். இரண்டாம் இடத்தில் தேமுதிமுகவின் நல்லதம்பியும், மூன்றாம் இடத்தில் பா.ஜ.கவின் பொன். வி கணபதியும் காணப்பட்டனர். இந்நிலையில் சசிகாந்த் வெற்றி பெற்றார்.
திருவள்ளூர் மக்களவை தொகுதி
தமிழ்நாட்டின் முதல் மக்களவை தொகுதி என்ற பெருமையை திருவள்ளூர் பெறுகிறது. 2008ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர், திருவள்ளூர் தொகுதி உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னர் 1951 முதல் 1962 வரை 3 தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இத்தொகுதியானது பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தனித்தொகுதி ஆகும்.
சட்டமன்ற தொகுதிகள்
கும்மிடிப்பூண்டி
பொன்னேனி (தனி)
திருவள்ளூர்
பூந்தமல்லி
ஆவடி
மாதவரம்
இந்தத் தொகுதியில் அதிகப்பட்சமாக 73.73 சதவீதம் வரை வாக்குகள் 2014 மக்களவை தேர்தலில் பதிவாகின. 2019ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி 9,49,684 ஆண்களும், 9,70,347 பெண்களும் வாக்காளர்களாக உள்ளனர். இவர்கள் தவிர 341 மூன்றாம் பாலினத்தவர்கள் வாக்காளர்களாக உள்ளனர்.
2024 மக்களவை தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் 68.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தற்போது இந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சசிகாந்த் செந்தில், பா.ஜ.க சார்பில் பொன். வி கணபதி, தே.மு.தி.க சார்பில் நல்லதம்பி, நாம் தமிழர் கட்சி தரப்பில் ஜெகதீஷ் சுந்தர் களத்தில் இருந்தனர்.
காங்கிரஸ் சசிகாந்த் வெற்றி
சசிகாந்த் (காங்கிரஸ்)
7,96,956
பொன். வி பால கணபதி (பா.ஜ.க)
2,24,801
நல்ல தம்பி (தே.மு.தி.க)
2,23,904
ஜெகதீஷ் (நாம் தமிழர்)
1,20,838
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“