Thiruvalluvar day Tamil News: உலக பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை போற்றும் வகையில் ஆண்டுதோறும் தை மாதம் 2-ந்தேதி (ஜனவரி 15) திருவள்ளுவர் தினமாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி அஞ்சலி
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, திருவள்ளுவர் தினத்தில் திருவள்ளுவருக்கு அஞ்சலி செலுத்துவதாக கூறியுள்ளார். இது குறித்து அவரது ட்விட்டர் பதிவில், "திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை.
பன்முகத்தன்மை மற்றும் அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் நினைவகத்தின் காணொலியை பகிர்கிறேன்' என்று கூறி அந்த காணொலியையும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.
திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை. பன்முகத்தன்மை & அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் நினைவகத்தின் காணொலியை பகிர்கிறேன். pic.twitter.com/l15sJhD5CR
— Narendra Modi (@narendramodi) January 15, 2022
துணைக் குடியரசு தலைவர் அஞ்சலி
"சத்தியத்தைப் போல் மகிமையானது எதுவுமில்லை; மற்ற எல்லா நற்குணங்களும் அதிலிருந்துதான் பாய்கின்றன - திருவள்ளுவர்" என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள இந்திய துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, "#திருவள்ளுவர் தினத்தில், சிறந்த தத்துவஞானி, புகழ்பெற்ற துறவி மற்றும் மதிப்பிற்குரிய தமிழ்க் கவிஞரான திருவள்ளுவருக்கு எனது மரியாதைக்குரிய அஞ்சலிகளை செலுத்துகிறேன்." தெரிவித்துள்ளார்.
Nothing is so glorious as truthfulness;
all other virtues flow from it -Thiruvalluvar
On #ThiruvalluvarDay, I pay my respectful tributes to the great philosopher, distinguished saint and revered Tamil poet, Thiruvalluvar. #Thiruvalluvar pic.twitter.com/gX4iEDQQ5i— Vice President of India (@VPSecretariat) January 15, 2022
முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று சமத்துவத்தைப் போதிக்கும் திருக்குறளை வழங்கிய அய்யன் வள்ளுவரைப் போற்றும் திருவள்ளுவர் நாளில், தமிழினத் தலைவர் கலைஞர் அமைத்த வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து வணங்கினேன்." என்று பதிவிட்டுள்ளார்.
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று சமத்துவத்தைப் போதிக்கும் திருக்குறளை வழங்கிய அய்யன் வள்ளுவரைப் போற்றும் திருவள்ளுவர் நாளில், தமிழினத் தலைவர் கலைஞர் அமைத்த வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து வணங்கினேன். pic.twitter.com/tMUK4zV81n
— M.K.Stalin (@mkstalin) January 15, 2022
எதிர்க்கட்சி தலைவர் அஞ்சலி
தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், " உலக மக்கள் அனைவருக்கும் நன்மை பயக்கும் அறநெறி கருத்துகளை எளிமையாக, உலகப் பொதுமறை என போற்றப்படும் திருக்குறளில் கூறி, நம் தமிழ் மொழியின் பெருமையை தரணியில் தலை நிமிரச் செய்த வள்ளுவ பெருந்தகையை அவரின் திருநாளில் போற்றி வணங்குகிறேன்." என்று பதிவிட்டுள்ளார்.
உலக மக்கள் அனைவருக்கும் நன்மை பயக்கும் அறநெறி கருத்துகளை எளிமையாக, உலகப் பொதுமறை என போற்றப்படும் திருக்குறளில் கூறி, நம் தமிழ் மொழியின் பெருமையை தரணியில் தலை நிமிரச் செய்த வள்ளுவ பெருந்தகையை அவரின் திருநாளில் போற்றி வணங்குகிறேன்.#திருவள்ளுவர்தினம் pic.twitter.com/79pCItko13
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) January 15, 2022
மத்திய பிரதேச முதல்வர்
"சிறந்த கவிஞர் புனித திருவள்ளுவர் ஜி அவர்களின் பிறந்தநாளான #திருவள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள்! எளிய வாழ்க்கை வாழ்ந்து தமிழ் இலக்கியத்தில் சமுதாய முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்ட திருக்குறளைப் படைத்து, மனித குலத்தின் நலனுக்காகப் பாடுபட்ட தெய்வீக ஆன்மாவை வணங்குகிறேன்!" மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
Greetings on #ThiruvalluvarDay, the birth anniversary of the eminent poet, Saint Thiruvalluvar Ji! I bow down to the divine soul, who worked for the welfare of humanity by creating Thirukural, a work based on society's progress in Tamil literature while living a simple life! pic.twitter.com/WaHv4d46a5
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) January 15, 2022
மணற்சிற்பமாக வள்ளுவர்
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் வள்ளுவரின் படத்தை மணற்சிற்பமாக வடித்துள்ளார் பிரபல மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்.
On the occasion of #ThiruvalluvarDay My SandArt at puri beach in Odisha. pic.twitter.com/4Dz4AHoIFA
— Sudarsan Pattnaik (@sudarsansand) January 15, 2022
புதுச்சேரி முதல்வர் வள்ளுவர் சிலைக்கு மரியாதை
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வள்ளுவர் சிலைக்கு புதுச்சேரி அரசு சார்பில் மாநில முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர், அமைச்சர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
புதுச்சேரி : திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வள்ளுவர் சிலைக்கு அரசு சார்பில் மாநில முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை
புதுச்சேரி சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர், அமைச்சர்கள் ஆகியோர் வள்ளுவர் சிலைக்கு மரியாதை#Puducherry | #NRangasamy | #ThiruvalluvarDay pic.twitter.com/3XnLzFPf8V— ChannelVision (@iChannelVision) January 15, 2022
கவிஞர் வைரமுத்து மரியாதை
"திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு, வெற்றித்தமிழர் பேரவை சார்பில் சென்னை பெசன்ட் நகர் திருவள்ளுவர் சிலைக்கு மாலைசூட்டி மகிழ்ந்தோம். இது திருவள்ளுவர் நாடு என்ற அறிவடையாளம் பெறவேண்டும் என்ற கருத்தை ஊடகத்தார்க்கு உரைத்தேன்." என கவிஞ்சர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
திருவள்ளுவர்
திருநாளை முன்னிட்டு
வெற்றித்தமிழர் பேரவை சார்பில்
சென்னை பெசன்ட் நகர்
திருவள்ளுவர் சிலைக்கு
மாலைசூட்டி மகிழ்ந்தோம்
இது திருவள்ளுவர் நாடு என்ற
அறிவடையாளம் பெறவேண்டும்
என்ற கருத்தை
ஊடகத்தார்க்கு உரைத்தேன்#திருவள்ளுவர்தினம் | #தமிழ் pic.twitter.com/fXPSPzL5Mi— வைரமுத்து (@Vairamuthu) January 15, 2022
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.