முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சி்லை மிகப் பிரமாண்டமாக அமைந்துள்ளது. இந்தச் சிலை கடல் உப்புக் காற்றில் பாதிக்கப்படாமல் இருக்கும் வண்ணம் இரசாயனம் பூசும் பணிகள் நடைபெறும்.
Advertisment
இந்தப் பணிகளை மாவட்டத்தில் பெய்த பெருமழை தடுத்துவிட்டது. திருவள்ளுவர் சிலைக்கு இரசாயன பூச்சு பணிகள் சற்று வித்தியாசமானது. பொதுவாக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை காகித கூழ்-ஐ பூசி ஒருமாதம் உலர வைப்பார்கள்.
அதன்பின்னர், முதல் கூழ் பூச்சு காகிதங்களை அகற்றி விட்டு மீண்டும், சிலிக்கான் என்னும் ரசாயனம் கலவையுடன் கூடிய காகித கூழ்-ஐ பூசுவார்கள்.
கன்னியாகுமரி திருவள்ளூவர் சிலை
அதன் பணிகள் முடிவடைந்த உடன் காகித கூழ் முழுவதும் உலருவதற்கான கால இடை உண்டு. ஆனால், இம்முறை திடீரென்று பெய்ய தொடங்கிய இடை விடாத தொடர் மழையால் சிலை மீது பூசப்பட்ட ரசாயனம் கலந்த காகித கூழ் பூச்சு சிறு,சிறு துண்டுகளாக சிலையில் இருந்து பெயர்ந்து விழுந்து விட்டது.
இதனால்.இந்தப் பணியை மீண்டும் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், ஐயப்ப சுவாமிகளின் கூட்டம் அதிகமாக வரும் காலத்திற்குள் திருவள்ளுவர் சிலை பணிகளை நிறைவு செய்து திறந்து விட வேண்டும் என சுற்றுலா துறை மேற்கொண்ட முயற்சியும் தடை பட்டு போனது.
குமரி செய்தியாளர் த.இ.தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil