/tamil-ie/media/media_files/uploads/2019/11/thiruvalluvar.jpg)
bjp, thiruvalluvar, thiruvalluvar bjp, thiruvalluvar safforn dress, thiruvalluvar bjp insults, திருவள்ளுவர், காவி ஆடை, தமிழக பாஜக, சர்ச்சை, நெட்டிசன்
தமிழக பாஜக கட்சியின் டுவிட்டர் பக்கத்தில், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் மோடி தாய்லாந்தில் 3 நாள் அரசுமுறை சுற்றுப் பயணம் சென்றுள்ளார்.அங்கு இந்திய வம்சாவளியினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அந்த விழாவில் திருக்குறளின் 'தாய்' மொழி பெயர்ப்பையும் மோடி வெளியிட்டார்.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
கடவுளை தூற்றி, இறைநம்பிக்கை கொண்டவர்களை பழிப்பவர்களுக்கு, அவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன்?
அன்றே வள்ளுவர் சொன்னதை இன்று தி.கவும், திமுகவை நம்பி வாழும் கம்யூனிஸ்டுட்களும், அவர்கள் சார்ந்த ஊடகங்களும் அறிந்து தெளிய வேண்டும் pic.twitter.com/xBeXs9aXHa— BJP Tamilnadu (@BJP4TamilNadu) November 2, 2019
இதுதொடர்பாக, தமிழக பா.ஜ. வெளியிட்டுள்ள செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது, நெட்டிசன்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தமிழக பாஜக திருவள்ளுவரை அவமானப்படுத்திவிட்டது. அவருக்கும் கூட மத சாயம் பூசிவிட்டது என்று குறிப்பிட்டு பலர் இணையத்தில் தமிழக பாஜகவிற்கு எதிராக டுவிட் செய்து வருகிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.