கோவை அவினாசி சாலை மேம்பாலத்தில் அமைந்து இருந்த 4 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலை, சில மாதங்களுக்கு முன்பு எரிவாயு டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்து ஏற்பட்டபோது மீட்பு பணிகளுக்குத் தடையாக இருந்ததால் தற்காலிகமாக அகற்றப்பட்டது.
மாநகராட்சி அதிகாரிகள் சிலையை பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர். பின்னர் சிற்பக் கலைஞர்கள் சிலையைப் புதிதாக புணரமைக்கும் பணிகளை மேற்கொண்டனர். அந்தப் பணிகள் முடிவு அடைந்ததைத் தொடர்ந்து புதன்கிழமை காலை திருவள்ளுவர் சிலை மீண்டும் அதே இடத்தில் சிறப்பு முறையில் நிறுவப்பட்டது.
புதிய தோற்றத்தில் திருவள்ளுவர் சிலை மீண்டும் மேம்பாலத்தில் நிறுவப்பட்டதை அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். மேலும் சிலை அமைந்து உள்ள இடம் சுத்தம் செய்து அழகுபடுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
கோவை அவினாசி சாலை மேம்பாலத்தில் அமைந்து இருந்த 4 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலை, சில மாதங்களுக்கு முன்பு எரிவாயு டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்து ஏற்பட்டபோது மீட்பு பணிகளுக்குத் தடையாக இருந்ததால் தற்காலிகமாக அகற்றப்பட்டது.
மாநகராட்சி அதிகாரிகள் சிலையை பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர். பின்னர் சிற்பக் கலைஞர்கள் சிலையைப் புதிதாக புணரமைக்கும் பணிகளை மேற்கொண்டனர். அந்தப் பணிகள் முடிவு அடைந்ததைத் தொடர்ந்து இன்று காலை திருவள்ளுவர் சிலை மீண்டும் அதே இடத்தில் சிறப்பு முறையில் நிறுவப்பட்டது.