Thiruvalluvar statue vandalised thanjavur pillaiyarpatti leaders condemns students protest - தஞ்சையில் திருவள்ளுவர் சிலை உடைப்பு - மாணவர்கள் போராட்டம், தலைவர்கள் கண்டனம்
தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது. சிலையின் மீது மர்ம நபர்கள் சாணத்தை பூசி இழிவுபடுத்தி உள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Advertisment
Thanjavur: Statue of Tamil poet & philosopher, Thiruvalluvar vandalized in Pillayarpatti, earlier today. Police have registered a case, investigation is underway. #TamilNadupic.twitter.com/otsCneIpWx
திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் பாஜக, திருக்குறளே ஒரு இந்து சனாதான தர்மத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நூல் என்கிறது. பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா இக்கருத்தை வலியுறுத்தி தமது ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
Advertisment
Advertisements
இந்நிலையில் தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் அடுத்து உள்ள பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை மீது மாட்டு சாணத்தை மர்ம நபர்கள் வீசியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தைக் கண்டித்து பிள்ளையார்பட்டி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். தமிழர் விரோதமாக செயல்படும் சமூக விரோதிகளை போலீசார் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
திருவள்ளுவர் சிலையை அவமரியாதை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஸ்டாலின் கண்டனம்
இச்சம்பவம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் , "இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், தவறு செய்தவர்களின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
கனிமொழி கண்டனம் திமுக மகளிர் அணி செயலாளரும் லோக்சபா எம்.பியுமான கனிமொழி தமது ட்விட்டர் பக்கத்தில், "வள்ளுவர் சிலையை சேதப்படுத்தலாம். ஆனால் அதை செய்த மூடர்கள் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும். திருவள்ளுவர் என்பவர் சிலை மட்டும் இல்லை. வள்ளுவம் என்பது வாழ்வியல் அறம். சிலையை சேதப்படுத்தியவர்கள் மறைந்து மண்ணோடு போனபின்பும் வள்ளுவம் வாழும்" என்று கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.
வள்ளுவர் சிலையை சேதப்படுத்தலாம். ஆனால் அதை செய்த மூடர்கள் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும். திருவள்ளுவர் என்பவர் சிலை மட்டும் இல்லை. வள்ளுவம் என்பது வாழ்வியல் அறம். சிலையை சேதப்படுத்தியவர்கள் மறைந்து மண்ணோடு போனபின்பும் வள்ளுவம் வாழும்.#திருவள்ளுவர்pic.twitter.com/UWg4YpVBD8
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச் செயலளார் இன்று தனது ட்விட்டர் ,"தஞ்சாவூர், பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இதற்குக் காரணமானவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.உலகப்பொதுமறை என கொண்டாடப்படும் திருக்குறளைப் படைத்த திருவள்ளுவர், சாதி- மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவருக்கும் பொதுவானவர். தமிழ், தமிழினம் என்ற எல்லைகளைத் தாண்டி அவர் போற்றப்படுகிறார். வள்ளுவரின் சொந்த மண்ணான தமிழகத்தில் அவரை வைத்து நடக்கும் சர்ச்சைகளும், இத்தகைய அவமதிப்பு நிகழ்வும் தேவையற்றவை; தவிர்க்கப்பட வேண்டியவை, " என்று பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் பெ. மணியரசன், 'திருவள்ளுவர் மனித குலத்துக்கு பொதுவானவர். யாருக்கும் எதிரானவர் அல்ல. இச்செயல் கடும் கண்டனத்துக்குரியது. அவரது சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி, விழுப்புரம் எம்.பி.யும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளருமான ரவிக்குமார், மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.