சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்தில், மே 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு திருவள்ளூவர் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவினை ஆளுநர் ஆர்.என். ரவி தலைமை ஏற்று நடத்துகிறார்.
இந்த நிலையில் இது தொடர்பான அழைப்பிதழ் பகிரப்பட்டுள்ளது. அதில், “திருவள்ளூர் கழுததில் கனத்த ருத்திராட்சமும், நெற்றியில் திருநீறும், காவி உடையும் அணிந்து காணப்படுகிறது.
2024 ஜனவரி மாதத்திலும் திருவள்ளூவருக்கு காவி உடை, ருத்திராட்சம் மற்றும் திருநீறு அணிவிக்கப்பட்டிருந்த புகைப்படத்தை பகிர்ந்து கவர்னர் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
இது அப்போது சர்ச்சையாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் திருவள்ளூவர் படத்துக்கு காவி உடை, திருநீறு அணியப்பட்டிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
மீண்டும் வெடித்த சர்ச்சை
இதற்கிடையில் திருவள்ளூவர் சிலைக்கு காவி உடை அணியப்பட்டதற்கு தமிழ் மற்றும் திராவிட அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. உலக பொதுமறை நூலான திருக்குறள் எழுதிய திருவள்ளூவர் கடந்த காலங்களில் வெள்ளை நிற ஆடை அணிந்தப்படியான புகைப்படங்களில் தோற்றம் அளித்தார்.
இதற்கிடையில் இந்துத்துவ அமைப்புகள் திருவள்ளூவர் ஓர் சைவ நாயனர் என்ற கூறறை முன்வைத்து வருகின்றனர். இதனால் இருதரப்புக்கும் இடையே அவ்வப்போது சச்சரவுகள் ஏற்படும்.
முன்னதாக ஜனவரி மாதம் திருவள்ளூவர் விழாவில் பேசிய கவர்னர் ஆர்.என். ரவி, “ஆன்மிக பூமியான தமிழ்நாட்டில் பிறந்த திருவள்ளூவர், சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான ஞானி என்றார்.
இந்தக் கூற்றுக்கு பலரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்தனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்து இருந்தார் எனபது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“