திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்த பகுதியை நடிகர் கேபிஒய் பாலா பார்வையிட்டு உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் நிவாரணத் தொகையை வழங்கினார்.
திருவண்ணாமலையில் வரலாறு காணாத பெய்த கனமழையின் காரணமாக மண் சரிவு ஏற்பட்ட நிலையில் ஒரே வீட்டில் ஏழு பேர் சிக்கினர். 2 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு அவர்கள் 7 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர்.
அடுத்த மண்சரிவு, மின்சாரம் துண்டிப்பு என மீட்பு பணியில் தடங்கல் இருந்ததால் மீட்பு பணி சற்று தாமதமானதாக பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.
பின்னர் பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தீயணைப்பு துறையினருடன் சேர்ந்து மீட்பு பணியை தொடங்கினார்கள்.
இரண்டு நாட்கள் போராட்டத்திற்கு பிறகு ஒவ்வொரு சடலமாக வீட்டில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது. வீட்டில் சிக்கிக்கொண்ட கணவன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் விளையாட வந்த மூன்று குழந்தைகள் என மொத்தம் ஏழு பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இந்நிலையில் நிபுணர்கள் குழு அங்கு ஆய்வு மேற்கொண்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்திருந்தார்.
நடிகர் கேபிஒய் பாலா மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கினார். மண்சரிவு ஏற்பட்ட இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட பாலா இறந்தவர்களின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிவாரணத் தொகையையும் கேபிஒய் பாலா வழங்கினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“