பள்ளி மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ஆசிரியை சிக்கியது எப்படி என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த பையூர் காலனி பகுதியை சேர்ந்தவர் உமேஷ்குமார் (வயது 45), ஆசிரியர். இவரது மனைவி நித்யா(30). வேலூர் மாவட்டம் மாமண்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.
முதலில் நித்யா, செங்கம் புதுப்பாளையம் பகுதியில் பணிபுரிந்த போது, மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வந்திருக்கிறார். நித்யா ஆங்கில வகுப்பு எடுக்கும் ஆசிரியை என்பதால், பல மாணவர்கள் அவரிடம் படித்து வந்திருக்கின்றனர். அந்த மாணவர்களில் தனது பிடித்தவர்களை மட்டும் தேர்வு செய்த நித்யா, அவர்களின் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு, ஸ்பெஷல் கிளாஸ் இருக்கிறது என்று கூறி அழைத்திருக்கிறார்.
அப்போது, அந்த மாணவர்களிடம் தனது இச்சைகளை தீர்த்துக் கொண்ட நித்யா, அந்த காமக் களியாட்டங்களை வீடியோவாகவும் எடுத்து, அதனை தனிமையில் இருக்கும் போது பார்த்து ரசித்திருக்கிறார்.
அந்த வீடியோக்கள் கணவர் உமேஷ் குமார் கையில் கிடைக்க, அவர் மனைவியை பலமுறை எச்சரித்து இருக்கிறார். தானும் ஒரு ஆசிரியர் என்பதால், மாணவர்களின் எதிர்காலம் எவ்வாறு பாதிக்கும் என்பதையும் நித்யாவுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைக்க முயற்சி செய்திருக்கிறார்.
ஆனால், நித்யா தொடர்ந்து இந்த செயல்களில் ஈடுபட, கணவர் உமேஷ் பிரிந்து சென்றுவிட்டார்.
அதன்பிறகு, பையூர் பகுதியை சேர்ந்த ஐ.டி.ஐ. பயிலும் 17 வயது மாணவருடன் நித்யா தகாத உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உமேஷ்குமார் ஆரணி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அவர் கலெக்டர் கந்தசாமியிடம் புகார் அளித்தார்.
இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட, மாவட்ட நன்னடத்தை அலுவலரும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலருமான சித்ரபிரியா விசாரணை நடத்தினார். அதில் ஆசிரியை நித்யாவின் காம லீலைகள் உண்மை என்பது தெரியவரவே ஆரணி மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் நித்யாவை கைது செய்து, ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.
மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதியும், மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதியுமான (பொறுப்பு) எஸ்.தேவநாதன் வழக்கை விசரித்து, ஆசிரியை நித்யாவை ஏப்ரல் 4ம் தேதிவரை வேலூர் மத்திய பெண்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார், பள்ளி மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட ஆசிரியை நித்யாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
எந்தத் துறையாக இருந்தாலும் பெரும்பாலும் பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் சூழலில், ஒரு இளம் ஆசிரியையால் மாணவர்களே சீரழிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியையும், பெற்றோர்களிடையே கலக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.