Advertisment

கண்ணாடி கூண்டுக்குள் ஆழித்தேர்... பக்தர்களுக்கு எப்போதும் காட்சி அளிக்கும் வகையில் புது ஏற்பாடு!

தேர்முட்டியில் நின்றிருக்கும் தேரை சுற்றிலும் தற்போது கண்ணாடி கூண்டு போடப்பட்டுள்ளது. 40 லட்சம் ரூபாய் செலவில் கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Thiruvarur Azhi ther will be placed inside glass cell for visitors and travelers

Thiruvarur Azhi ther will be placed inside glass cell for visitors and travelers : திருவாரூர் தியாகராஜர் தேரை அனைவரும் காணும் வகையில் கண்ணாடி கூண்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்கான தேரோட்டம் மார்ச் மாதம் கொடியேற்றியத்துடன் துவங்கப்பட்டது. ஆனால் கொரோனா நோய் தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆழித்தேர் என்றும் அழைக்கப்படும் திருவாரூர் தேர் சுமார் 96 அடி உயரமும், 360 டன் எடையும் கொண்டது.

Advertisment

பண்டைய காலங்களில் மக்களும் யானைகளும் இணைந்து வடம் இழுக்கப்பட்ட தேர் தற்போது ஹைட்ராலிக் பிரேக் மூலம் செயல்படுகிறது. ஆழித்தேரின் புகழ் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகெங்கும் பரவியுள்ளது. ஆனால் இதனை தேரோட்டம் தவிர வேறு நாட்களில் பார்ப்பது அரிதான காட்சி தான். அதனால் தேர்முட்டியில் நின்றிருக்கும் தேரை சுற்றிலும் தற்போது கண்ணாடி கூண்டு போடப்பட்டுள்ளது. 40 லட்சம் ரூபாய் செலவில் கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டது. எனவே எப்போது வேண்டுமானாலும் வெளிநாட்டினர், வெளிமாநிலத்தவர் மற்றும் வெளியூர்காரர்கள் இந்த தேரின் பிரம்மாண்ட அழகை கண்டு ரசிக்கலாம்.

பூதப்பார், சிறுஉறுதலம், பெரியஉறுதலம், நடகாசனம், விமாசனம், தேவாசனம், சிம்மாசனம் பீடம் என ஏழு அடுக்குகளை கொண்டுள்ளது. சித்திரை மாதத்தில் நடக்கும் தேரோட்டம் இனி அடுத்த வருடத்திற்கு தான். அதன் பிரம்மாண்டத்தை இனி அடுத்த வருடம் தான் காண இயலும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Thiruvarur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment