திருவாரூர் இடைத்தேர்தலில் நிற்க போவது யார்? என்ற கேள்விக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
Advertisment
திருவாரூர் தொகுதி வேட்பாளர்:
திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தமிழக அரசியலில் பரபரப்பு பற்றிக் கொண்டது. அனைத்து கட்சிகளும் தேர்தல் குறித்த வேலைகளில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.
வழக்கத்தை போல் இம்முறையும் அதிமுக - திமுக சார்பில் போட்டியிட போகும் வேட்பாளர் யார்? என்ற கேள்வி தொண்டர்கள் மத்தியில் மேலூங்கியுள்ளது. குறிப்பாக இந்த இடைத்தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட வேண்டும் திமுகவினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தல் மற்றும் சட்டப்பேரவைக் கூட்டத்தை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசிக்க திமுக எம்எல்ஏக்களின் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடைப்பெற்றது.
இந்த கூட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கனிமொழி உள்ளிட்ட முக்கிய திமுக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டம் நிறைவடைந்த பின்பு மு.க ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ சட்டப்பேரவைக் கூட்டத்தில் யார், யார் எந்தெந்தப் பிரச்சினைகளில் பேசுவது என்பது குறித்து ஆலோசித்தோம். திருவாரூர் தொகுதியின் திமுக வேட்பாளர் நானா (ஸ்டாலின்), டி.ஆர்.பாலுவா, துரைமுருகனா என்பது வரும் 4-ம் தேதி மாலை 6 மணிக்குள் தெரிந்துவிடும்.
தேர்தலில் யார் நின்றாலும் திமுக தொண்டர்கள் அவர்களுக்காக உழைக்க வேண்டும். மாவட்ட செயலாளர்கள். வட்ட செயலாளர்கள் ஆகியோர் கண்டிப்பாக தேர்தலில் தீவிரமாக உழைக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.