Thiruvarur by-election candidates : திருவாரூர் தேர்தல் வருகின்ற 28ம் தேதி நடைபெற உள்ளது. திமுக வேட்பாளர் நேர்காணல் இன்று நடக்கிறது. இன்று கூடுவதாக இருந்த அதிமுக ஆட்சிமன்றக் குழு நாளை (5-ம் தேதி) கூட இருப்பதாக தெரிய வந்திருக்கிறது.
இதனால் அதிமுக வேட்பாளர் தேர்வு தள்ளிப் போகும் என தெரிகிறது. இதற்கிடையே இன்று பிற்பகலில் அ.ம.மு.க. வேட்பாளராக எஸ்.காமராஜ் என்பவரை டிடிவி தினகரன் அறிவித்தார். இவர் திருவாரூர் மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் ஆவார். இதற்கிடையே மாலையில் திமுக நேர்காணல் முடிந்ததும், திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
Thiruvarur by-election candidates :
நேற்று பெங்களூரு சிறையில், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வரும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவை நேரில் சந்தித்து பேசினார் தினகரன். அதன் பின்னர் சசிகலாவை சந்தித்து பேசியவர், பின்பு செய்தியாளர்களிடம் இந்த தகவலை தெரிவித்தார்.
திமுக - வேட்பாளர்கள் தேர்வு :
நேற்று மற்றும் 2ம் தேதி அன்று திருவாரூர் தொகுதியில் வேட்பாளராக நிற்பவர்களுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடக்க இருக்கும் நேர்காணலுக்கு பின்பு தான், திமுக சார்பில் வேட்பாளர் யார் என்று அறிவிப்பார்கள். விருப்ப மனுவில் உதயநிதி ஸ்டாலினிற்காக அவரின் ரசிகர்கள் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர்.
திமுகவிற்கு ஏற்கனவே காங்கிரஸ்,, சிபிஐ, மதிமுக, மனித நேய மக்கள் கட்சி போன்ற கட்சிகள் தங்களின் ஆதரவை தெரிவித்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தங்களின் ஆதரவினை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க : திருவாரூர் இடைத்தேர்தலுக்கு தடையில்லை : உயர்நீதிமன்றம் அதிரடி!
அதிமுக வேட்பாளர் யார் ?
அதிமுக தலைமை கழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இன்று மாலை அதிமுக ஆட்சிமன்றக் குழு கூடி வேட்பாளரை தேர்வு செய்ய இருப்பதாக முதலில் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் ஆட்சிமன்றக் குழு நாளை (5-ம் தேதி) கூட இருப்பதாகவும், அப்போதுதான் வேட்பாளரை முடிவு செய்ய இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தல் வருகின்ற 28-1-2019 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு தலைமைக் கழகத்தில் இன்று கழகத்தின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்பு வேண்டி திருவாரூர் மாவட்டதை சேர்ந்த நிர்வாகிகளும் கழக உடன்பிறப்புகளும் தங்களது விருப்ப மனுக்களை அளித்தனர். pic.twitter.com/927g4y5VnE
— AIADMK (@AIADMKOfficial) 3 January 2019
நாம் தமிழர் கட்சி சார்பில், அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சாகுல் ஹமீது போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
#JUSTIN திருவாரூர் இடைத்தேர்தலில் அமமுக சார்பில் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் போட்டி - தினகரன் அறிவிப்பு#ThiruvarurByElection | #Kamaraj | #TTVDhinakaran pic.twitter.com/OHI18uycXJ
— Thanthi TV (@ThanthiTV) 4 January 2019
இதற்கிடையே இன்று பிற்பகலில் அ.ம.மு.க. வேட்பாளராக எஸ்.காமராஜ் என்பவரை டிடிவி தினகரன் அறிவித்தார். இவர் திருவாரூர் மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் ஆவார்.
இதற்கிடையே மாலையில் திமுக நேர்காணல் முடிந்ததும், திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.