சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம், நகரின் அழகை மேம்படுத்தும் நோக்கில் மற்றொரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
சாத்தியக்கூறு ஆய்வு நடத்தி, திட்ட அறிக்கைகளைத் தயாரித்து, வட சென்னையில் ஒன்று மற்றும் தெற்கில் சைக்கிள் தடங்கள் என இரண்டு கடற்கரைகளை மேம்படுத்துவதற்கு டெண்டர்கள் கோரியுள்ளது.
முதற்கட்டமாக திருவொற்றியூர் பாரதிநகர் கடற்கரை மற்றும் நீலாங்கரை-அக்கரை கடற்கரை ஆகியவை அழகுபடுத்துவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.
நீலாங்கரைக்கும் அக்கரைக்கும் இடையிலான ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் சைக்கிள் பாதையும் அமைக்கப்படும்.
டெண்டர் செயல்முறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சுற்றுச்சூழல் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு இரண்டு கடற்கரைகளிலும் அறிமுகப்படுத்தக்கூடிய அம்சங்கள் என்ன என்பதைப் புரிந்துகொள்வதற்கான சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ள உள்ளனர்.
"அவர்கள் பின்னர் ஒரு டிபிஆர் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு நாங்கள் அழகுபடுத்தும் பணியை தொடங்குவோம்" என்று சிஎம்டிஏ அதிகாரி கூறினார். கடற்கரையை அழகுபடுத்துதல், சைக்கிள் பாதைகள் அமைத்தல் உள்ளிட்டவை சமீபத்தில் சட்டசபையில் அறிவிக்கப்பட்டன. இத்திட்டங்கள் விரைவாக நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதற்காக சிஎம்டிஏ அமைச்சர் பிகே சேகர் பாபு, சிஎம்டிஏ அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு வந்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil