/tamil-ie/media/media_files/uploads/2022/10/Untitled-design-25.jpg)
Chennai Tamil News: திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞரணி சார்பில், சென்னை பாரி முனையில் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இதை, அமைச்சர் சேகர் பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுகவின் மூத்த உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பேசிய தயாநிதி மாறன், "தமிழகம் தலை சிறந்த மாநிலமாக இருப்பதற்கு காரணம் பெரியார், அண்ணா, கருணாநிதியே" என்றார்.
மேலும், அமைச்சர் சேகர் பாபு பேசியதாவது:
"நம் நாட்டில் மதம் சார்ந்து, இனம் சார்ந்து, மக்களை பிளவு படுத்தி, அந்த பிளவின் வாயிலாக நாட்டில் அசாதாரண சூழலை உருவாக்குகின்றனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், நாட்டின் இறையாண்மைக்கும் கேடு விளைவிக்கின்ற கூட்டத்தை அடக்கி ஒடுக்க வேண்டும் என்றால், தமிழக இளைஞர் படை அவசியம் தேவைப்படுகிறது என்பதை உணர்ந்து, இந்த பாசறைக் கூட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த கூட்டங்கள் தமிழகமெங்கும் இளைஞரணி சார்பில் நடத்திவருகின்றோம்", என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.