என்ன போஸ்டர் அது? நாங்கள் ஒட்டவில்லை! சிதம்பரத்தை கலக்கிய போஸ்டர் குறித்து திருமாவளவன் விளக்கம்!

தம்பிகள் இருக்கின்றோம்.. தயங்காதே! தனித்தன்மையோடு சிதம்பரத்தில் மீண்டும் வெற்றி பெறுவோம்

கடந்த இரண்டு தினங்களாக சிதம்பரத்தை கலக்கிக் கொண்டிருந்த விசிக போஸ்டர் குறித்து அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

விசிக போஸ்டர் :

கடந்த இரண்டு தினங்களாக சிதம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் விசிக சார்பில் ஓட்டப்பட்டிருந்த போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஜெயலலிதா மறைவிற்கு பின் நடைபெற்ற ஆர்.கே. நகர் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக வாக்கு கேட்டு களத்தில் இறங்கினார் வைகோ.

அந்த சூழ்நிலையை புரிந்துகொண்ட திருமாவளவன், ஆர்.கே. நகரில் விசிக சார்பில் வேட்பாளரை களமிறக்காமல் திமுக ஆதரவு மனநிலையில் இருந்தார். அந்த இடைத்தேர்தலில் டிடிவி. தினகரன் வெற்றி பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்

அதன் பின்பும், திமுக மற்றும் விசிக இடையில் நல்லதொரு உறவுமுறை இருந்தது அரசியல் வட்டாரத்தில் நன்கு தெரிவுற்றது. சமீபத்தில், கருணாநிதி மருத்துவமனையில் இருந்த காலக்கட்டதில் ஸ்டாலினுடன் திருமாவிற்கு நெருக்கம் ஏற்பட, கருணாநிதி மறைந்த பின் நடைபெற்ற புகழஞ்சலி கூட்டத்தில், திமுக உடன்பிறப்பாகவே உறையாற்றினார் என்றால் மிகையாகாது.

அடுத்த தேர்தல் வந்தால் திமுகவுடன் தான் கூட்டணி, ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்குவது தான் லட்சியம் என வைகோ வெளிப்படையாகவே அறிவித்துவிட்ட நிலையில், சிதம்பரம் முழுவதும் விசிக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர் போஸ்டர்கள் அரசியல் நோக்கர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த போஸ்டரில், “ஒரு இடத்திற்காக 39 தொகுதிகளில் உழைக்க வேண்டுமா? 2ஜியை நாம் சுமக்க வேண்டாம்.. தம்பிகள் இருக்கின்றோம்.. தயங்காதே! தனித்தன்மையோடு சிதம்பரத்தில் மீண்டும் வெற்றி பெறுவோம்! திமுக கூட்டணியிலிருந்து வெளியேறு” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர்கள் சமூகவலைத்தளங்களிலும் வைரலாக பரவின. இதுக் குறித்து திமுக சார்பிலும், விசிக தலைவர் திருமாவளவனும் எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தனர். இந்நிலையில், விசிக தலைவர் தொல். திருமாவளவன் இதுக் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

இதுக் குறித்து அவர் கூறியிருப்பதாவது, “ திமுக கூட்டணியிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியேற வேண்டும் என ஒரு சுவரொட்டியின் படத்தை விஷமிகள் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றன. விடுதலை சிறுத்தைகள் அப்படியொரு சுவரொட்டியை எங்கும் ஒட்டவில்லை” என்று கூறியுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Tamilnadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close