Thirumavalavan | விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தேர்தல் பத்திரங்களில் மிகப்பெரிய ஊழலின் சட்டப்பூர்வ வடிவம்; அரசியலமைப்பு சட்டம்தான் பா.ஜனதாவின் எதிரி” என்றார்.
இதுகுறித்து மேலும் பேசிய திருமாவளவன், “நாட்டில் அனைருக்கும் உரிமையை கொடுக்கும் அரசமைப்புதான் பாரதிய ஜனதாவின் முதல் எதிரி.
நாட்டில் மிகப்பெரிய ஊழல் அறங்கேற்றப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் மிகப்பெரிய ஊழலை செய்துவிட்டு பா.ஜனதா அமைதி காக்கிறது.
தேர்தல் பத்திர ஊழலுக்கு பொறுப்பேற்று மோடி பதவி விலக வேண்டும்” என்றார்.
மக்களவை தேர்தல் தேதி நாளை (மார்ச் 16) அறிவிக்கப்பட உள்ளது. தொல். திருமாவளவன், கடந்த முறையே போன்று கடலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார்.
இண்டியா கூட்டணியில் தொல். திருமாவளவனுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதிகளில் கடந்த முறையே போன்று ரவிக் குமார் மற்றும் தொல். திருமாவளவன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“