Advertisment

'அண்ணன் கமல், இளவல் விஜய்க்கு நன்றி.. நாம் தமிழருக்கு வாழ்த்து': தொல். திருமாவளவன்

தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், சினிமா பாடலாசிரியர் வைரமுத்துக்கு நன்றி தெரிவித்துள்ள தொல். திருமாவளவன் எம்.பி., நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Thol Thirumavalavan met actor Prakash Raj in Bengaluru

நாம் தமிழர் கட்சிக்கு தொல். திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், சினிமா பாடலாசிரியர் வைரமுத்துக்கு நன்றி தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் தொல். திருமாவளவன், “தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற எமது கட்சிக்கு மனமுவந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்பு இளவல் நடிகர் விஜய் (@actorvijay) அவர்களுக்கும்; மக்கள் நீதி மையத்தின் தலைவர் உலக நாயகன் அண்ணன் கமல்ஹாசன் (@ikamalhaasan) அவர்களுக்கும் கவிப்பேரரசு அண்ணன் வைரமுத்து (@Vairamuthu) அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

Advertisment

இத்தேர்தலில் எம்மைப் போல தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள நாம் தமிழர் கட்சிக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்” எனத் தெரிவித்து சீமான் கணக்கை டேக் செய்துள்ளார் தொல். திருமாவளவன் எம்.பி.

2024 மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி காங்கிரஸ், திமுகவின் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்தது. நாம் தமிழர் தமிழ்நாடு புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு 8 சதவீத வாக்குகளை பெற்றது. சீமான் இந்தத் தேர்தலில் 50 சதவீதம் பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியிருந்தார். அதாவது போட்டியிட்ட 40 வேட்பாளர்களில் 20 பேர் பெண்கள் ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Thirumavalavan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment