18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் இன்று (Oct 25, 2018) தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் கருத்துகளை முன்வைத்துள்ளனர்.
திமுக கட்சித் தலைவர் முக ஸ்டாலின் 20 தொகுதிகளுக்கும் உடனடியாக தேர்தல் நடத்த ஆணையம் முன்வர வேண்டும் என கூறியிருக்கிறார். மேலும் பார்க்க : போட்டோ கேலரி - பட்டாசு வெடித்து கொண்டாடிய அதிமுகவினர்
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு திருமாவளவன் கருத்து :
விடுதலை சிறுத்தைக் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இந்த தீர்ப்பு ஜனநாயகத்திற்கு முரணானது என தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டி அளித்திருக்கிறார். இந்த தீர்ப்பு முற்றிலும் அதிர்ச்சி அளிப்பதாகவும், ஜனநாயகத்திற்கும் எதிரானது என்று கூறிய தொல்.திருமாவளவன், அந்த 18 எம்.எல்.ஏக்கள், ஆளுநரை சந்தித்து முதல்வரை மாற்ற வேண்டும் என்று கூறியதைத் தவிர வேறொன்றையும் செய்யவில்லை என்று கூறியிருக்கிறார். 18 பேர் தகுதி நீக்க வழக்கின் லைவ் அட்பேட் படிக்க
“கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என கூறியிருக்கிறார்கள். அனைவரும் வேறொரு கட்சியை சார்ந்தவர்கள் என்று கூற இயலாது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டுள்ளார்கள் என்பது உண்மை எனில் ஒழுங்கு நடவடிக்கை மட்டுமே எடுக்க வேண்டுமே தவிர பதவி நீக்கம் என்பது எதேச்சதிகாரப் போக்காகும். இந்த தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீடு செய்தால் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும் . முதல்வர் மீதான எதிர்ப்பினை தெரிவிப்பது அவர்களின் ஜனநாயக உரிமை” என்று கூறினார்.
ஒரு வேளை அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியாகியிருந்தால் நிச்சயம் நம்பிக்கை வாக்கெடுப்பு போன்ற விசயங்கள் நடந்திருக்கும் என்றும் திருமாவளவன் தன்னுடைய கருத்தினை பதிவு செய்திருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.