scorecardresearch

பிரபாகரன் உயிருடன் இருந்தாலும் அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன? தொல். திருமாவளவன்

பிரபாகரன் உயிருடன் இருந்தாலும் அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன என தொல் திருமாவளவன் கேள்வியெழுப்பி உள்ளார்.

Thol Thirumavalavan has questioned why there is a need to announce even if Prabhakaran is alive
தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற பின்னணியில் இவர்கள் இருக்கலாம் என தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? என கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்குப் பதில் அளித்த தொல். திருமாவளவன், “இந்த அறிவிப்பில் காலப் பொருத்தமும் இல்லை, அரசியல் பொருத்தமும் இல்லை.
ஏன் இப்போது பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று சொல்ல வேண்டிய தேவை எழுந்தது. அப்படியே அவர் உயிருடன் இருந்தாலும் இப்போது சொல்ல வேண்டிய தேவை என்ன?

ஆனால் ஒன்று வெளிப்படுகிறது. இந்திய பாஜக அரசு ஈழத் தழிழர் பிரச்னையை வேறு நோக்கத்தோடு, சிங்கள அரசை அச்சுறுத்தும் நோக்கோடு தலையிடுவதாக தெரிகிறது.
இந்திய அரசு அல்லது உளவுத் துறை இந்த அறிவிப்பின் பின்னணியில் உள்ளதாக கூறப்படுகிறது” என்றார்.

தொடர்ந்து, ஈரோடு கிழக்கில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் விதி மீறல்களில் ஈடுபடுகின்றனர் என தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதே எனக் கேள்வியெழுப்பினார்கள்.
அதற்கு திருமாவளவன், “தேர்தல் ஆணையம் பாஜக கட்டுப்பாட்டில் உள்ளது. திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கட்டும்” என்றார்.

இதையடுத்து பேனா நினைவுச் சின்னத்தை உடைப்பேன் என சீமான் சொல்கிறாரே என்ற கேள்விக்கு, “இது முடிந்து போன விஷயம்” என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Thol thirumavalavan has questioned why there is a need to announce even if prabhakaran is alive

Best of Express