டைரக்டர் லோக பத்மநாதன் இயக்கியுள்ள 'செம்பியன் மாதேவி' படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பேசிய தொல். திருமாவளவன், “காதலை அரசியலாக்கி ஆதாயம் தேடுவதில் சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகளை விட கெட்டிக்காரர்கள்” எனக் குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், “நாடகக் காதல் என்றெல்லாம் ஒன்று கிடையாது. டீ சர்ட், ஜூன்ஸ் போட்டால் பெண்கள் மயங்கிவிடுவார்களா? இது நம் வீட்டுப் பெண்களை கொச்சைப்படுத்தும் பேச்சு” எனவும் கூறினார்.
மேலும் பேசிய அவர், “படத்தை பார்க்காமல் முழுமையாக சொல்ல முடியாது. சினிமா துறையில் இருப்பவர்களும் காதலை அரசியலாக்கி வியாபாரம் செய்கிறார்கள். அவர்கள் அரசியல்வாதிகளை விட கெட்டிக்காரர்கள். என் பெயரை சொல்லியும் பிழைக்கிறார்கள்.
பிழைத்துவிட்டு போகட்டும். இந்த விஷயததில் நான் அவர்களுக்கு ஒரு மூலதனப் பொருளாக இருக்கிறேன். காதல் என்பது காலம் காலமாக பேசக்கூடிய பொருள். உயர்ந்த சிறந்த பொருள். உயிர்கள் தோன்றிய காலத்தில் இருந்தே மனித குலத்தை வழிநடத்துகிறது. இது யாரும் சொல்லிவருவதில்லை.
இது ஓர் இயல்பான உணர்வு. காதலித்து பார்த்தால்தான் காதலலைப் புரிந்துக்கொள்ள முடியும்” என்றார். மேலும் காதலை சொல்லித் தரவும் முடியாது” என்றார்.
மேலும், “நாடக் காதல் என்று ஒன்றும் இல்லை. டீசர்ட் ஜீன்ஸ் போட்டால் பெண்கள் மயங்கிவிடுவார்கள் என்பது நம் வீட்டு பெண்களை இழிவுப்படுத்துவது ஆகும்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“