Prakash Raj | Bengaluru | 18வது மக்களவை தேர்தல் தொடங்கி நடந்துவருகிறது. இந்த நிலையில், முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்.19ஆம் தேதி நடந்து முடிந்தது.
அதேபோல், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்.26ஆம் தேதி வெள்ளிக்கிழமை (நேற்று) நடந்து முடிந்தது. இதில் கர்நாடகாவில் உள்ள சில மக்களவை தொகுதிகளும் அடங்கும்.
பிரகாஷ் ராஜ்- திருமாவளவன் சந்திப்பு
இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தொல். திருமாவளவன், கர்நாடக முதலமைச்சர் சித்த ராமையா, துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோரை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
இதற்கிடையில் நடிகரும், பிரதமர் நரேந்திர மோடியை தீவிரமாக விமர்சித்து வருபவருமான பிரகாஷ் ராஜ்-ஐ பெங்களூருவில் சந்தித்துப் பேசினார்.
என்ன பேசினார்கள்?
இந்தச் சந்திப்பு சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது. அப்போது தற்கால அரசியல் குறித்து இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரான தொல். திருமாவளவன் சிதம்பரம் தனித் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில் கார்த்திகேயினி என்பவர் களம் கண்டுள்ளார்.
ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை
மக்களை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 18வது மக்களவையின் நிறைவு கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“