தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி சென்னை தலைமை செயலகத்தில் இன்று சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “ கூட்டணியில் இருந்தாலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகிறோம்” என்றார்.
தொடர்ந்து, பகுஜன் சமாஜ் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் பா.ஜ.க சி.பி.ஐ விசாரணை கோரியது ஏன்? ஆரூத்ரா மோசடி வழக்கில் பா.ஜ.க.வினர் சிலருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது” என்றார்.
மேலும், ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பா.ஜ.க போன்ற கட்சிகள் முயற்சிக்கின்றன” என்றார்.
பகுஜன் சமாஜ் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அக்கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி, “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது; ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.
இதற்கிடையில் சி.பி.ஐ விசாரணை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த மூத்த அமைச்சர் துரை முருகன், “சி.பி.ஐ விசாரணை கேட்பது பேஷனாகிவிட்டது” என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“