திருச்சியில் விஜய்... தி.மு.க கூட்டணிக்கு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது: திருமா பேச்சு

திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை விஜய் தொடங்கிய நிலையில், 'தி.மு.க தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது' திருமாவளவன் கூறியுள்ளார்.

திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை விஜய் தொடங்கிய நிலையில், 'தி.மு.க தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது' திருமாவளவன் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Thol Thirumavalavan on vijay tvk campaign trichy Tamil News

திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை விஜய் தொடங்கிய நிலையில், 'தி.மு.க தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது' திருமாவளவன் கூறியுள்ளார்.

த.வெ.க தலைவர் விஜய் திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்கியதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் அருகிலுள்ள சுங்கம் பகுதியில் அமைந்துள்ள தனியார் அரங்கில் "சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா எஸ்சி, எஸ்டி ஊழியர்கள் சங்கம்" சார்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

Advertisment

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து திருமாவளவனிடம் திருச்சியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது குறித்து கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்து பேசிய திருமாவளவன் தெரிவித்ததாவது; திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள விஜய்க்கு வாழ்த்துக்கள் என்று கூறினார். தற்பொழுது தான் விஜய் தன்னுடைய அரசியலில் களப்பணிகள் தீவிரமடைந்துள்ளது. விஜய்யின் பிரச்சாரம் தமிழக அரசில் களத்தை தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்தவர்,’’ விஜய் தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற முடியும்.

ஆனால், தி.மு.க தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு தலைமையிலான கூட்டணிக்கு எந்தவித பாதிப்பு தாக்கத்தையோ ஏற்படுத்தாது என்று நம்புகிறேன். திமுக கூட்டணி தமிழகத்தில் வலுவாக உள்ளது. அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. ஆனால் அது வலுவாக உள்ளதா இல்லையா என்று எனக்கு தெரியாது, ஆனால் அவை வடிவமில்லாமல் உள்ளதாக கூறினார். இந்த சூழலில் விஜய் கூட்டணி இல்லாமல் தனியாக தேர்தலை சந்திக்க உள்ளார். இதற்கும் முழு வடிவம் பெறவில்லை, தனியாக சந்திப்பதற்கும் வாய்ப்பில்லை என்று கூறினார்.

செய்தி: க.சண்முகவடிவேல்.

Vijay Thirumavalavan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: