அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் தொல். திருமாவளவன் பேச்சு
கன்னியாகுமரி அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன், எஸ்.ஆர்.எம். கல்வி குழும தலைவரும் ஐ.ஜே.கே கட்சியினுடைய மாநில தலைவருமான ரவி பச்சை முத்து, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் விஜய் வசந்த், நாகர்கோவில் மக்களவை முன்னாள் தி மு க., உறுப்பினர் ஹெலன் டேவிட்சன் மற்றும் பல்வேறு சமுகத்தின் தலைவர்கள் பங்கேற்றனர்.
Advertisment
கிறிஸ்துமஸ் விழாவின் முதல் நிகழ்வாக கேக் வெட்டும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பார்கள் பங்கு பெற்றனர். விழாவின் நிறைவாக நலிந்த நிலையில் உள்ள 10க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்ட தலைவர்கள்
விழா நிறைவுக்கு பின் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இடம் பேசிய தொல். திருமாவளவன் தமிழக அரசு பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கவில்லை என்று கூறுகிறார்கள். கருப்பை பொங்கல் பண்டிகை அன்று வழங்கினால் தான் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். 10 நாட்களுக்கு முன்பே வழங்கினால் நன்றாக இருக்குமா.? என எடப்பாடி பழனிச்சாமி அறிக்கைக்கு பதில் சொன்னார்.
தொடர்ந்து, தமிழக மக்களுக்கு எவ்வளவோ பிரச்னைகள் இருக்கிறது. அதை விடுத்து அண்ணாமலை அவர் அணிந்துள்ள கை கடிகாரம் பற்றி பேசுவது அவசியமற்றது. பாஜக வினர் விளம்பரத்துக்காக எந்த நிலைக்கும் செல்வார்கள். ஆட்சியில் இருப்பதற்காக மதங்களுக்கு இடையே வெறுப்பை பாஜக விதைக்கிறார்கள்.
அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் கேக் வெட்டிய தொல். திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உடன் பாஜக கூட்டணி அமைக்குமா.? எனக் கேட்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் எந்தக் காலத்திலும் பாஜக வுடன் கூட்டணி அமைக்காது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு இல்லை. தமிழகத்தில் நல்லவர்களால் பாராட்டக்கூடிய நல்லாட்சி நடந்து வருகிறது” என்றார்.
செய்தியாளர் த.இ. தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/