விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான தொல். திருமாவளவன் விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “ஆவின் பால் பொருள்கள் விலை உயர்வை தமிழக அரசு மறுபரீசிலனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும், “இந்தியா” கூட்டணி உருவான நாளில் இருந்து நரேந்திர மோடி பதற்றத்தில் இருக்கிறார் எனவும் கூறினார். மேலும் அவர் கூறுகையில், “தமிழ்நாட்டில் ஆவின் பொருட்களின் விலை உயர்வை அரசு மறுபரிசீலனை செய்து உயர்த்திய விலையை குறைக்க அரசு முன்வர வேண்டும்.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை இனி எந்த ஒரு ஆட்சியாளரும் நிறுத்த முடியாது; கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பெண்களிடையே செல்வாக்கு உயரும்” என்றார்.
தொடர்ந்து, பிரேமலதா விஜயகாந்த் கருத்துக்கு பதில் அளித்த தொல். திருமாவளவன், “ஒரு பெண் என்ற அடிப்படையில் பிரேமலதா விஜயகாந்த் உரிமைத்தொகை திட்டத்தை பாராட்டி இருக்க வேண்டும். இந்த திட்டத்தை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி குறித்து பேசுகையில், “இந்தியா கூட்டணி உருவானதில் இருந்து, பிரதமர் நரேந்திரமோடி பதற்றத்துடன் இருக்கிறார்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“