Thirumavalavan | விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “அ.தி.மு.க., தி.மு.க எதிரெதிர் அணிகளாக இருந்தாலும் சமூக நீதி என்று வந்துவிட்டால் அவர்கள் ஒரே பார்வை கொண்டவர்கள்தான்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக மற்றும் அதிமுக அணி என்றுதான் இதுவரை தேர்தலை சந்தித்து வந்தது. ஆனால் பா.ஜ.க. மற்றும் சங் பரிவார் அமைப்புகள் தமிழ்நாட்டில் வெறுப்பு அரசியலை நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்த யுத்தத்தில் தமிழ்நாட்டையும், அகில இந்திய அளவில் அரசியலமைப்பு சட்டத்தையும், பாதுகாத்து நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டும்” என்றார்.
முன்னதாக, “திருவள்ளூர், வள்ளலார் உள்ளிட்டோரை பாஜக அபகறிக்க முயற்சி செய்கிறது. இதனை அவர்கள் அறியாமையில் செய்யவில்லை.
திட்டமிட்டு செய்கின்றனர். இந்த தேர்தல் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிக்கு இடையேயான யுத்தம் அல்ல; மக்களுக்கும் பாஜக தலைமையிலான சங் பரிவார் கும்பலுக்கும் இடையேயான யுத்தம்.
அகில இந்திய அளவில் புரட்சி ஏற்பட உள்ளது; இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என அறிவிக்காமல் இருக்காமல், ஆனால் அது தற்போதய தேவை இல்லை" என்றார்.
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“