/indian-express-tamil/media/media_files/Z5uxvEgSZ9M1HqecQIHi.jpg)
'என் அன்பு இளவலை இழந்துவிட்டேன்“ என தொல். திருமாவளவன் கூறினார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், ஜூலை 5ஆம் தேதி இரவு பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் சென்னையில் வைத்து வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலையில் தொடர்புடைய 8 பேர் இதுவரை கைதாகி உள்ளனர். ஆற்காடு ரவி கொலைக்கு பழிக்கு பழியாக இந்தக் கொலை நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் உடல் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளித் திடலில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு மாயாவதி இன்று (ஜூலை 7, 2024) அஞ்சலி செலுத்தினார்.
அப்போது, “பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு தேவை. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலையை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்” என்றார். தொடர்ந்து, இது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்றார்.
சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் அன்பு சகோதரர் #ஆம்ஸ்ட்ராங் அவர்களின் இரங்கல் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன். pic.twitter.com/RLFAYsGL2n
— Thol. Thirumavalavan (@thirumaofficial) July 7, 2024
இந்த நிலையில் பேசிய விசிக தலைவரும் கடலூர் எம்.பி.யுமான தொல். திருமாவளவன், “ஆம்ஸ்ட்ராங் கொலை விசாரணையில் தமிழ்நாடு அரசு தீவிரம் காட்ட வேண்டும். ஆம்ஸ்ட்ராங் என் அன்பு இளவல்; பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியின் கோரிக்கை குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும்” என்றார்.
இன்று ஆம்ஸட்ராங்கின் உடலுக்கு இயக்குனர்கள் வெற்றிமாறன், பா. ரஞ்சித், நடிகர் தீனா உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.